For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ச்சும்மா பெரிய்ய பெரிய்ய சிக்ஸரா விளாசனும்... ரசிக்க வைக்கும் ரஸ்ஸல் ஆசைகள்!

கொல்கத்தா: மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசனும். பிறகு பெரிய பெரிய சிக்ஸர்களாக விளாசனும்.. இது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைச் சேர்ந்த அதிரடி ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரஸ்ஸலின் சின்னச் சின்ன ஆசைகளாம்.

எப்போதும் இந்த இலக்கை மனதில் கொண்டே அவர் பந்து வீசுவாராம், பேட் செய்வாராம். இவர் சிக்ஸர் விளாச ஆரம்பித்து விட்டால் அந்தக் கடவுளே வந்தாலும் கூட தடுக்க முடியாது. அப்படி ஒரு பேயாட்டம் போட்டு விடுவார்.

கிரிக்கெட் உலகில் தற்போது உள்ள வெகு சில மிகச் சிறந்த ஆல் ரவுண்டர்களில் மேற்கு இந்தியத் தீவுகளின் ரஸ்ஸலுக்கும் தனி இடம் உண்டு. கொல்கத்தாவுக்காக ஐபிஎல்லில் ஆடி வருகிறார் ரஸ்ஸல்.

13 விக்கெட்

13 விக்கெட்

நடப்பு சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்ககாக இதுவரை 13 விக்கெட்களைச் சாய்த்துள்ளார் ரஸ்ஸல். மேலும் அதிக வி்கெட் வீழ்த்திய பவுலர்கள் வரிசையில் மும்பை இந்தியன்ஸின் மிட்சல் மெக்ளெனகனுடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார்.

வேகமாக வீசனும் பாஸ்

வேகமாக வீசனும் பாஸ்

தனது பவுலிங் ஸ்டைல் குறித்து ரஸ்ஸல் கூறுகையில் நான் எப்போதுமே வேகமாக பந்து வீச வேண்டும் என்றுதான் எத்தனிப்பேன். மணிக்கு 150 கிலோமீட்டருக்குக் குறையக் கூடாது என்பதே எனது லட்சியமாக இருக்கும்.

சிக்ஸர் வெளுக்கனும்

சிக்ஸர் வெளுக்கனும்

அதேபோல பேட் செய்யும்போது சிக்ஸராக வெளுக்க வேண்டும் என்பது எனது தாகமாக இருக்கும். மைதானத்தைத் தாண்டி பந்து போக வேண்டும் என்று விரும்புவேன்.

"ட்ரூ ஆல் ரவுண்டர்"

நான் ஒரு ட்ரூ ஆல் ரவுண்டர். எப்பவுமே நான் இப்படித்தான் விளையாடுவேன். ஆரம்பத்திலிருந்தே வேகமான பந்து வீச்சாக எனது பந்து வீச்சு இருக்க வேண்டும் என விரும்புபவன் நான் என்றார் ரஸ்ஸல்.

Story first published: Thursday, May 5, 2016, 13:21 [IST]
Other articles published on May 5, 2016
English summary
Describing himself as a "true all-rounder", Kolkata Knight Riders' (KKR) Andre Russell has revealed that he always aimed to bowl at 150 kilometres per hour and then smash big sixes.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X