For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் வரலாற்றில் குறைந்த ஸ்கோரில் சுருண்ட டாப் 10 அணிகள் இவைதான்.. சிஎஸ்கேவும் இருக்கிறது

பல்வேறு, லோ-ஸ்கோரிங் போட்டிகளையும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பார்த்துள்ளது. இப்படிப்பட்ட 10 போட்டிகள் உங்கள் பார்வைக்கு.

By Veera Kumar

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா தொடங்கப்பட்டு இப்போது 10 வருடமாகிறது. பேட்ஸ்மேன்களின் ஆதிக்கம் கொண்ட இந்த தொடரில், பவுலர்களும் சாதித்து தங்கள் பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

நேற்றைய போட்டியில் ஐபிஎல் வரலாற்றிலேயே குறைந்தபட்ச ஸ்கோரை ஒரு அணி பதிவு செய்தது. அது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியாகும்.

இதேபோல மேலும் சில லோ-ஸ்கோரிங் போட்டிகளையும் இந்த ஐபிஎல் பார்த்துள்ளது. இப்படிப்பட்ட 10 போட்டிகள் உங்கள் பார்வைக்கு.

பெங்களூர் அணி

பெங்களூர் அணி

இந்த பட்டியலில் ஏற்கனவே கூறியதை போல ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிதான் முதலிடம் பிடித்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக 9.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த பெங்களூர் அணி 49 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. கெய்ல், கோஹ்லி, டிவில்லியர்ஸ் என உலக கிரிக்கெட்டை ஆட்டிப் படைத்து வரும் பேட்ஸ்மேன்கள் இந்த அணியில் இருந்தும் 82 ரன்கள் வித்தியாசத்தில் இப்படி ஒரு மட்டமான தோல்வியை சந்தித்தது ராயல் சேலஞ்சர்ஸ்.

முந்தைய ஸ்கோர்

முந்தைய ஸ்கோர்

2009ல் இதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 15.1 ஓவர்களில் 58 ரன்களுக்கு ஆல்அவுட்டானதுதான் முந்தைய குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. பாவம், இப்போது ஆல்அவுட் செய்த அணியே குறைந்த ரன்னில் ஆல்அவுட்டாகிவிட்டது.

கொல்கத்தா

கொல்கத்தா

2008ல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 15.2 ஓவர்களில் கொல்கத்தா அணி 67 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

மீண்டும் பெங்களூர்

மீண்டும் பெங்களூர்

2014ல் ராஜஸ்தான் ராயல்சுக்கு எதிரான போட்டியில், 15 ஓவர்களில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 70 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

கொச்சி அணி

கொச்சி அணி

2011ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணி, 74 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இவ்விரு அணிகளுமே இப்போது ஐபிஎல் போட்டித் தொடரில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

சிஎஸ்கே தப்பவில்லை

சிஎஸ்கே தப்பவில்லை

2013ம் ஆண்டு, மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 79 ரன்களில் ஆல்-அவுட்டானது. சிஎஸ்கே 60 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

டெல்லி அணி

டெல்லி அணி

2013ல் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், டெல்லி டேர் டெவில்ஸ் அணி 19.1 ஓவர்களில் 80 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

2011ல் கொல்கத்தா அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 15.2 ஓவர்களில், 81 ரன்களில் ஆல்அவுட்டானது. இப்போட்டியில் கொல்கத்தா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெக்கான் அணி

டெக்கான் அணி

2010ல் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் டீம் 18.3 ஓவர்களில், 82 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. இதில் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

பெங்களூர்

பெங்களூர்

2008 கொல்கத்தா அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 15.1 ஓவர்களில் 82 ரன்களில் ஆல்அவுட்டாகி அதிர்ச்சியளித்தது. இந்த பட்டியலில் கணிசமான இடங்களை மல்லையாவின் பெங்களூர் அணி பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, April 24, 2017, 17:16 [IST]
Other articles published on Apr 24, 2017
English summary
As Indian Premier League enters its tenth year we look at the 10 lowest team totals in the history of the IPL. RCB have made the record of scoring the lowest total in the history of the tournament.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X