For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கொல்கத்தாவிற்கு வில்லனாக மாறிய வார்னர்.. குறைந்த பந்தில் சதம் அடித்து சாதனை !

By Karthikeyan

ஹைதராபாத்: கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் அதிரடியாக ஆடிய வார்னர் 43 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் அரங்கில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 5வது இடத்தை பெற்றார்.

ஐபிஎல் லீக் போட்டியில் நேற்று இரவு ஹைதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை எதிர்கொண்டது ஹைதராபாத். முதலில் ஆடிய ஹைதராபாத் 209 ரன்கள் குவித்தது. இதன் பின்னர் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களை மட்டுமே எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

 IPL 2017: David Warner slams 43-ball hundred

அபாரமாக ஆடிய வார்னர் 43 பந்துகளில் சதம் விளாசி ஐபிஎல் அரங்கில் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் வரிசையில் 5வது இடத்தை பெற்றார்.

இதன் மூலம் ஐபிஎல் அரங்கில் தனது 3வது சதத்தை பதிவு செய்த வார்னர், ஐபிஎல் வரலாற்றில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் 3வது இடத்தை பெங்களூர் அணியின் டி வில்லியர்சுடன் பகிர்ந்து கொண்டார். இவர்கள் இருவரும் தலா 3 சதமடித்துள்ளனர். முதல் இடத்தில் 5 சதம் விளாசிய கிறிஸ் கெய்ல் உள்ளார். நான்கு சதம் அடித்த விராட் கோஹ்லி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஐபிஎல் அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆனார் வார்னர். முன்னதாக பஞ்சாப் அணியின் ஆம்லா 104 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. மேலும் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த கேப்டன் என்ற பெருமையும் பெற்றார் வார்னர். இதற்கு முன்பு 2011ல் டெல்லி அணி கேப்டனாக இருந்த சேவாக் 119 ரன்கள் எடுத்தது அதிகபட்ச ரன்னாக இருந்தது.

கொல்கத்தா பந்து வீச்சை நாலாபுறமும் பறக்க விட்ட வார்னர், 59 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சர் உடன் 126 ரன்கள் சேர்த்தார். இது அவரின் அதிகபட்ச ஐபிஎல் ஸ்கோர் ஆகும். முன்னதாக டெக்கான் அணிக்காக 109 ரன்கள் எடுத்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

Story first published: Monday, May 1, 2017, 2:18 [IST]
Other articles published on May 1, 2017
English summary
Sunrisers Hyderabad skipper David Warner notched up a century off just 43 deliveries in the Indian Premier League match on Sunday
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X