For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்துவீச்சில் அசத்திய புனே.. டெஸ்ட் மேச் போல விளையாடிய சொந்த மண்ணில் சொதப்பிய பெங்களூரு அணி

By Karthikeyan

பெங்களூர்: புனே அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், பெங்களூரு அணி சொந்த மண்ணில் தொடர்ந்து இரண்டாவது தோல்வியை சந்தித்தது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் பெங்களூர், புனே அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோஹ்லி முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது.

புனே அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர்கள் திரிபாதி 31, ரகானே 30 ரன்கள் எடுத்தனர். அதேபோல், கேப்டன் ஸ்மித் 28, தோனி 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மனோஜ் திவாரி 11 பந்துகளில் 27 ரன்கள் விளாசினார். பெங்களூருவின் மில்னே, அரவிந்த் தலா 2 விக்கெட்டுகளும், பத்ரி, வாட்சன், நெகி ஆகியோர் தல 1 விக்கெட் வீழ்த்தினர்.

 IPL 2017: Match 17: Pune beat Bangalore by 27 runs

162 ரன்கள் இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு கோஹ்லி 28 சிறப்பான தொடக்கம் கொடுத்தார். ஆனால் அவருடன் களமிறங்கிய மந்தீப் சிங் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் வந்த டிவில்லியர்ஸ் 30 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து மெதுவாக விளையாடி அவுட்டானார். தொடர்ந்து வந்த கேதார் ஜாதவ் 18, வாட்சன் 14 ஆகிய வீரர்கள் பவுண்டரி அடிக்க முடியாமல் தவித்தனர்

4வது ஓவரின் கடைசி பந்தில் கோஹ்லியால் அடிக்கப்பட்ட பவுண்டரிக்கு பின்னால், 15.1 வது ஓவரில் தான் அடுத்த பவுண்டரி அடிக்கப்பட்டது. 11 ஓவர்கள் வரை பவுண்டரி அடிக்காமல் டெஸ்ட் மேட்ச் போல பெங்களூரு அணி வீரர்கள் சொதப்பினர்.

பின் வரிசையில் வந்த பின்னி 18, நெகி 10, பத்ரி 0 என அடுத்தடுத்த அவுட் ஆகி வெளியேறினர். எனவே 20 ஓவரில் 134 ரன்கள் மட்டும் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது பெங்களூர். புனே அணியில் பென்ஸ் ஸ்டோக் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 18 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதேபோல், தாக்கூர் 3 விக்கெட்டுகளை எடுத்தார். உனட்கட் 4 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார். பந்து வீச்சில் அசத்திய புனே அணி சின்னசாமி மைதானத்தில் குறைந்த இலக்கை சேஸ் செய்யவிடாமல் பெங்களூர் அணியை வீழ்த்திய சாதனை படைத்துள்ளது.

Story first published: Monday, April 17, 2017, 3:22 [IST]
Other articles published on Apr 17, 2017
English summary
Rising Pune Supergiant (RPS) beat Royal Challengers Bangalore (RCB) by 27 runs in the match 17 of IPL 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X