For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"எல்லோரும் என்னை மன்னிச்சிருங்க.."

பெங்களூரு: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தொடர்ந்து கேவலமாக ஆடி வருவதால் ரசிகர்களிடம் கேப்டன் விராத் கோஹ்லி மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஏற்கனவே பெங்களூரு அணியை ரசிகர்கள் கேவலமாக விமர்சித்து வருகின்றனர். இப்படியே விளையாடிக் கொண்டிருந்தால் உங்களுக்கு எப்படி கப் கிடைக்கும் என்று ரசிகர்கள் கோபமாக கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் விராத் கோஹ்லி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

நேற்று தனது 10வது தோல்வியைச் சந்தித்துள்ளது பெங்களூரு அணி. இந்த முறை கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் கேவலமான தோல்வியைத் தழுவியுள்ளது இந்த அணி.

சுளுக்கெடுத்த சுனில்

சுளுக்கெடுத்த சுனில்

நேற்றைய போட்டியில் விராத் கோஹ்லி, கெய்ல் போன்றோர் சொதப்பினர். கெய்ல் டக் அவுட் ஆனார். மறுபக்கம் கொல்கத்தா பவுலிங்கில் சற்று சொதப்பினாலும் கூட பேட்டிங்கில் பிரித்து மேய்ந்து விட்டது. குறிப்பாக சுழற்பந்து புயல் சுனில் நரீன் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி வெளுத்து வாங்கி விட்டார்.

17 பந்துகளில் 54

17 பந்துகளில் 54

17 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 54 ரன்களை குவித்து அதகளம் செய்து விட்டார். சுனில் நரீனின் இந்த அதிரடி ஆட்டத்தால் கொல்கத்தா அணியின் சேஸிங் ரொம்ப ஈஸியானது. கடைசியில் 16வது ஓவரிலேயே அது வெற்றி இலக்கைத் தொட்டு பெங்களூர் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

ஸாரி சொன்ன கோஹ்லி

ஸாரி சொன்ன கோஹ்லி

இது பெங்களூரு அணிக்கு 10வது தோல்வியாகும். அதன் கோப்பைக் கனவும் கிட்டத்தட்ட நிராசையாகி வருகிறது. இது ரசிகர்களை மேலும் டென்ஷனாக்கியுள்ளது. இதையடுத்து ஸாரி சொல்லியுள்ளார் கேப்டன் கோஹ்லி.

என்ன விளையாட்டு இது

என்ன விளையாட்டு இது

என்ன விளையாடுகிறார்கள் என்று பெங்களூரு ரசிகர்கள் கடுப்பாகியுள்ளனர். இப்படி அடுத்தடுத்து தோற்று வருவதால் அணி மீதும், கேப்டன் கோஹ்லி மீதும் ரசிகர்கள் பாய ஆரம்பித்துள்ளனர்.

எப்படி வெல்ல முடியும்

எப்படி வெல்ல முடியும்

இதுவரை கோப்பையை வெல்லாத அணி பெங்களூர் அணி. தற்போதைய சீசனிலும் அது கோப்பையை வெல்லும் வாய்ப்பே இல்லை என்று ரசிகர்கள் சோகமாகியுள்ளனர். காரணம், அந்த அணியின் மோசமா ஆட்டம் தொடருவதால்.

மன்னிப்பு கேட்ட கோஹ்லி

மன்னிப்பு கேட்ட கோஹ்லி

இந்த நிலையில் தனது டிவிட்டர் பக்கத்தில் கோஹ்லி போட்டுள்ள டிவீட்டில், ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்புக்கு நான் நன்றி கூறுகிறேன். ஆனால் சரியாக விளையாடாமல் போனதற்காக வருத்தப்படுகிறேன். எங்களது திறமைக்கேற்ப நாங்கள் விளையாடவில்லை. இது வருத்தம் தருகிறது என்று கூறியுள்ளார் கோஹ்லி.

Story first published: Monday, May 8, 2017, 12:32 [IST]
Other articles published on May 8, 2017
English summary
Royal Challengers Bangalore (RCB) captain Virat Kohli has apologised to the fans after the team failed miserably in the ongoing Indian Premier League (IPL) 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X