For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டோணியைவிட ரோகித் ஷர்மாதான் சிறந்த டி20 வீரரா? புள்ளி விவரம் சொல்வதை பாருங்க

இப்போது யார் சிறந்த டி20 வீரர் என்ற போட்டியில் டோணியைவிட ரோகித் ஷர்மா ஒருபடி விஞ்சியிருக்கிறார் என்பதே புள்ளி விவரம் சொல்லும் தகவல்.

By Veera Kumar

ஹைதராபாத்: இந்தியாவின் சிறந்த டி20 கிரிக்கெட் வீரர் டோணியா, ரோஹித் ஷர்மாவா என்ற சர்ச்சை ரசிகர்கள் மத்தியில் கிளம்பியுள்ளது.

பொதுவாக டோணியை ராசியானவர் என புகழ்வது ரசிகர்கள் வாடிக்கை. ஆனால் ரோகித் ஷர்மா சிறப்பாக ஆடும் போட்டியிலும் இந்தியா தோல்வியடைந்துவிடும் என்ற விமர்சனத்தை ரசிகர்கள் முன் வைப்பார்கள்.

முன்பு சச்சினுக்கும் இதேபோன்ற விமர்சனம் முன் வைக்கப்பட்டது. சச்சினும், ரோகித்தும் ஓப்பனிங்கில் இறங்குவது வழக்கம். எனவே இவர்கள் சிறப்பாக ஆடி, பின்வரிசை வீரர்கள் சொதப்பினாலும் பழி என்னவோ இவ்விருவருக்கும்தான் வருவது வாடிக்கை.

அடித்தால் வெற்றிதான்

அடித்தால் வெற்றிதான்

டோணி நிலைமை அப்படியில்லை. வெற்றி பெற வேண்டிய தருணத்தில் கடைசி கட்டத்தில் களமிறங்குபவர். எனவே அவர் அடித்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருக்கும். சொதப்பினால் தோற்றுவிடும் என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் கணிப்பு.

ரோகித் ஷர்மா முன்னணி

ரோகித் ஷர்மா முன்னணி

புள்ளி விவரங்கள் அடிப்படையில் பார்த்தால் டி20 கிரிக்கெட் உலகில் ரோகித் ஷர்மா முடிசூடா மன்னன் என்பது தெளிவாகிறது. டோணியைவிட ஒரு படி மேலே போய்விட்டார் ரோகித் ஷர்மா.

அதிக வெற்றி

அதிக வெற்றி

ரோகித் ஷர்மா இடம் பெற்றிருந்த அணிகள்தான் அதிகப்படியான வெற்றியை ருசித்துள்ளன. இதுகுறித்த புள்ளி விவரம் தற்போது வெளியாகியுள்ளது. அதில் டோணியைவிட அதிக வெற்றியை ருசித்துள்ளார் ரோகித் ஷர்மா.

முக்கிய கோப்பைகள்

முக்கிய கோப்பைகள்

இந்திய அணி 2007ம் ஆண்டில் டி20 உலக கோப்பையை வென்றது. அந்த அணியில் ரோகித் ஷர்மா இடம் பிடித்திருந்தார். டோணிதான் அணியின் கேப்டனாக இருந்தார். 2016ல் ஆசிய கோப்பை டி20 வென்ற இந்திய அணியிலும் ரோகித் இடம் பெற்றிருந்தார்.

ஐபிஎல் சாதனை

ஐபிஎல் சாதனை

இதுதவிர ஐபிஎல் என எடுத்துப் பார்த்தால் 3 முறை மும்பை இந்தியன்ஸ் கோப்பையை வென்றபோதெல்லாம் அதில் ஒரு வீரராக இருந்தவர் ரோகித் ஷர்மா. மேலும், இவர் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடியபோது அந்த அணி கோப்பையை வென்றது. எனவே 4 முறை ஐபிஎல் சாம்பியன் கொண்டாட்டத்தில் இடம்பிடித்தவர் ரோகித் ஷர்மா. ஆக மொத்தம் 7 முறை இப்படி கோப்பையை வென்ற அணியில் இடம்பெற்றிருந்தவர் ரோகித் ஷர்மா.

டோணி சாதனை

டோணி சாதனை

ஆனால், டோணி, சுரேஷ் ரெய்னா, அஸ்வின், அம்பட்டி ராயுடு ஆகியோர் தலா 6 முறை வெற்றி பெற்ற அணிகளில் இடம் பெற்றுள்ளனர். இவர்களைவிட 1 கோப்பையை அதிகம் கைப்பற்றியுள்ளார் ரோகித் ஷர்மா.

சளைத்தவர்கள் இல்லை

சளைத்தவர்கள் இல்லை

யூசுப் பதான், ஹர்பஜன்சிங் ஆகியோர் 5 முறை கோப்பைகள் வென்ற அணியில் இடம் பிடித்தவர்களாகும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இப்போது யார் சிறந்த டி20 வீரர் என்ற போட்டியில் டோணியைவிட ரோகித் ஷர்மா ஒருபடி விஞ்சியிருக்கிறார்.

Story first published: Monday, May 22, 2017, 14:47 [IST]
Other articles published on May 22, 2017
English summary
Mumbai Indians (MI) captain Rohit Sharma has set a new Twenty20 record after winning IPL 2017 title.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X