For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடைசி பந்தில் வின்னிங் ஷாட்.. கிளம்பிய ஹெலிகாப்டர் சிக்சர்.. ரொம்ப நாள் பிறகு டோணியின் விஸ்வரூபம்

டோணி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 61 ரன்களை குவித்து, காட்டுக்கு சிங்கம் யார் என்பதை காட்டிவிட்டார்.

By Veera Kumar

புனே: டோணியின் அதிரடியால் புனே சூப்பர் ஜியான்ட் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்ந்துள்ளது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. கடைசி பந்தில் டோணி வின்னிங் ஷாட் அடித்து பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டது என ஏங்கிய ரசிகர்களுக்கு இன்று ஏக்கம் தீர்ந்தது.

புனே நகரிலுள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய லீக் ஆட்டத்தில், ஹைதராபாத் அணிக்கு எதிராக, டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங் தேர்ந்தெடுத்தது புனே.

ஹைதராபாத் அணி 20 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து பேட் செய்த புனே அணியின் தொடக்க வீரர் ரஹானே 2 ரன்களிலும், கேப்டன் ஸ்மித் 27 ரன்களிலும் வெளியேறினர்.

கடைசி கட்ட பரபரப்பு

கடைசி கட்ட பரபரப்பு

17வது ஓவரின் முதல் பந்தில், புனே அணி 121 ரன்கள் எடுத்திருந்த முக்கிய கட்டத்தில், பென் ஸ்டோக்ஸ் 10 ரன்களில் நடையை கட்டினார். ஆனால் மறுமுனையில் அசராமல் ஆடினார் டோணி. அவரது உடல் மொழி, ஷாட் தேர்வு போன்றவை டோணி மீண்டும் விஸ்வரூபம் எடுக்க போவதற்கான சமிக்ஞைகளை கொடுத்தபடியே இருந்தன.

இமாலய இலக்கு

இமாலய இலக்கு

17 ஓவர்கள் முடிவில் புனே அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு, 130 ரன்களை சேர்த்திருந்தது. எனவே 18 பந்துகளில், 47 ரன்கள் என்ற இமாலய இலக்கு புனே அணிக்கு எதிரே இருந்தது. என்னவாகுமோ என்ற பரபரப்பில் இருந்தனர் ரசிகர்கள். அப்போதுதான் புறப்பட்டது டோணியின் டிரேட் மார்க் ஷாட்டுகள்.

டோணியின் ஆவேசம்

டோணியின் ஆவேசம்

சிராஜ் வீசிய அந்த ஓவரிின் 4வது பந்தில் டோணி அபாரமாக லாங்-ஆன் திசையில் சிக்சர் விளாசினார். ஸ்லோவாக வீசிய அந்த பந்தை, தனது முழு பலம் கொண்டு அபாரமாக சிக்சராக மாற்றினார் டோணி. அடுத்த பந்திலேயே, பவுன்ஸ் செய்யப்பட்ட பந்தை அப்பர்-கட் செய்து பவுண்டரியாக மாற்றினார் டோணி. முன்னதாக திவாரி அடித்த பவுண்டரியின் உதவியால் ஓவர் முடிவில் 147 ரன்கள் எடுத்தது புனே.

பெஸ்ட் பவுலருக்கு ஹெலிகாப்டர் பரிசு

பெஸ்ட் பவுலருக்கு ஹெலிகாப்டர் பரிசு

அடுத்ததாக 19வது ஓவரை வீச வந்தார் புவனேஸ்வர்குமார். இந்த தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலர் இவர்தான். பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு ஓவரில் வெற்றி வாய்ப்பை பறித்தவர் இவர். ஆனால் அந்த சாதனைகள் டோணியின் ஆவேசத்தின் முன்பு தவிடு பொடியானது. முதல் பந்தை வைடாக வீசினார் புவனேஸ்வர் குமார். மீண்டும் அந்த பந்தை வீசியபோது டோணி பவுண்டரி விளாசினார். 2வது பந்தும் பவுண்டரி. 3வது பந்தில் சிக்சர் பறக்க அரங்கம் அதிர்ந்தது. அந்த சிக்சர் வெகுநாட்களாக ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த ஹெலிகாப்டர் ஷாட் மூலம் வந்தது சிறப்பு. 19வது ஓவர் முடிவில் புனே அணி 166 ரன்கள் எடுத்தது.

கோட்டை விட்ட கேட்ச்

கோட்டை விட்ட கேட்ச்

கடைசி ஓவரில் புனே வெற்றிக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில் ரசிகர்கள் நகம் கடித்தனர். அந்த ஓவரை சித்தார்த் கவுல் வீசினார். முதல் பந்திலேயே திவாரி பவுண்டரி விளாசினார். ஆனால், பவுண்டரி எல்லையில் ரஷீத் கேட்சை மிஸ் செய்ததால் அது பவுண்டரியானது. 2வது பந்தில் திவாரியும், 3வது பந்தில் டோணியும், 4வது பந்தில் திவாரியும் சிங்கிள் ரன் சேர்த்தனர். 5வது பந்தில் டோணி 2 ரன்கள் எடுத்தார். எனவே கடைசி பந்தில் 1 ரன் எடுத்தால் டிரா, 2 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது.

பெஸ்ட் ஃபினிஷர்

பெஸ்ட் ஃபினிஷர்

கடைசி ஓவரில் ஏற்பட்ட த்ரில்லால் ரசிகர்கள் சீட் நுனிக்கு வந்தனர். அந்த பந்தை டோணி பவுண்டரிக்கு விரட்டினார். இதனால் புனே 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டோணி வின்னிங் ஷாட்டை அடித்து போட்டியை முடித்து வைத்ததை பார்த்து வெகுநாட்களான ரசிகர்கள் துள்ளி குதித்தனர். அடுத்த வருடம் சிஎஸ்கேக்கு தலைமையேற்று டோணி காட்டப்போகும் ஹெலிகாப்டர் ஷாட்டுகளுக்கு இது முன்னோட்டம் என்று சிலாகித்தனர் நெட்டிசன்கள். டோணி 34 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 61 ரன்களை குவித்து, காட்டுக்கு சிங்கம் யார் என்பதை காட்டிவிட்டார்.

Story first published: Saturday, April 22, 2017, 21:48 [IST]
Other articles published on Apr 22, 2017
English summary
A late surge from all-rounder Moises Henriques helped Sunrisers Hyderabad (SRH) post a healthy 176/3 against Rising Pune Supergiant (RPS) in an Indian Premier League (IPL) 2017 match at the Maharashtra Cricket Association Stadium here on Saturday (April 22). RPS won off the last ball as Mahendra Singh hit a boundary.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X