For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் வரலாற்றில் டாப் 10 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான்.. டோணி, கோஹ்லிக்கு எந்த இடம்?

By Veera Kumar

மும்பை: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் குவித்த டாப் 10 வீரர்களை பற்றி பார்க்கலாம். ஐபிஎல் தொடர் தொடங்கி பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இங்கு பேட்ஸ்மேன்களே மதிக்கப்படுகிறார்கள். அவர்களே ராஜாவாக செயல்படுகிறார்கள்.

இப்படிப்பட்ட அதிரடி நாயகர்களில் டாப் 10 வீரர்கள் இவர்கள்தான். அவர்களின் போட்டிகள், சதங்கள், அரை சதங்கள் வாயிலாக வீரர்களின் மதிப்பை தெரிந்துகொள்ளலாம்.

அதிக ரன் குவித்த டாப் வீரர் ரெய்னா. இவர் சிஎஸ்கேவுக்காக ஆடியபோதுதான் அதிக ரன்களை குவித்திருந்தார்.

ரெய்னா

ரெய்னா

சுரேஷ் ரெய்னா, சிஎஸ்கே மற்றும் குஜராத் லயன்ஸ் வீரரான இவர் 154 போட்டிகளில் 4373 ரன்களை குவித்துள்ளார். இதில் 30 அரைசதங்கள், ஒரு சதம் உண்டு.

கோஹ்லி

கோஹ்லி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் விராட் கோஹ்லி 143 போட்டிகளில் ஆடி 4264 ரன்களை குவித்துள்ளார். நாலு சதங்கள், 28 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

ரோகித் ஷர்மா

ரோகித் ஷர்மா

டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் மும்பை அணி வீரரான ரோகித் ஷர்மா 150 போட்டிகளில் 3986 ரன்கள் குவித்துள்ளார். 30 அரை சதங்கள், ஒரு சதம்.

கம்பீர்

கம்பீர்

கவுதம் கம்பீர் 139 போட்டிகளில் 3877 ரன்கள் குவித்துள்ளார். 139 போட்டிகளில், 33 அரை சதங்கள் இவருடையது. சதம் இல்லை.

வார்னர்

வார்னர்

டெல்லி, ஹைதராபாத் வீரரான டேவிட் வார்னர், 3655 ரன்களை 107 போட்டிகளில் குவித்துள்ள வார்னர் 2 சதங்கள், 34 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

உத்தப்பா

உத்தப்பா

கொல்கத்தா வீரர் ராபின் உத்தப்பா முன்னதாதக புனே வாரியர், பெங்களூர், மும்பை அணிககளுக்காக ஆடியுள்ளார். 142 போட்டிகளில் 3575 ரன்ககள் குவித்தார். ஒரு சதமும் இல்லை, 19 முறை அரை சதங்கள் விளாசியுள்ளார்

கெய்ல் புயல்

கெய்ல் புயல்

கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிக்காக ஆடிவரும் கிறிஸ் கெயில் 3570 ரன்களை 97 போட்டிகளில் குவித்துள்ளார். 5 சதங்கள், 21 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

மிஸ்டர் 360 டிகிரி

மிஸ்டர் 360 டிகிரி

டெல்லி அதன்பிறகு பெங்களூருக்காக ஆடி வரும் டி வில்லியர்ஸ் 124 போட்டிகளில் 3402 ரன்களை விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள், 22 அரை சதங்கள் விளாசியுள்ளார்

தல டோணி

தல டோணி

சிஎஸ்கே மற்றும் புனே அணிக்காக ஆடி வரும் டோணி, 150 போட்டிகளில் 3400 ரன்களை குவித்துள்ளார். இதில் 17 அரை சதங்களாகும். சதம் இன்னும் விளாசவில்லை.

தவான்

தவான்

மும்பை, டெல்லி, டெக்கான், சன்ரைசர்ஸ் அணிகளுக்காக ஆடியுள்ள தவான், 120 போபட்டிகளில் 3317 ரன்களை குவித்துள்ளார். 50 ரன்களை 26 முறை கடந்த தவான், சதம் விளாசவில்லை.

Story first published: Thursday, April 27, 2017, 12:55 [IST]
Other articles published on Apr 27, 2017
English summary
Runs and more runs. That is what fans look forward to in the shortest form of cricket - Twenty20.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X