For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இலங்கை வீரர்களுடன் மோதல்.. இஷந்த் ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை

கொழும்பு : இலங்கை வீரர்களுடன் மோதலில் ஈடுபட்ட இந்திய வீரர் இஷாந்த ஷர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கை வீரர் சண்டிமாலுக்கு ஒரே ஒரு நாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளான நேற்று, இந்திய வீரர் இஷாந்த் ஷர்மாவுக்கும், இலங்கை வீரர் தம்மிக்கா பிரசாத் ஆகியோருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ishanth sharma

அப்போது பிரசாத்துக்கு ஆதரவாக இலங்கை வீரர்கள் சண்டிமால், திரிமண்ணே ஆகியோரும் இஷாந்த் ஷர்மாவுடன் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், ஐசிசியின் நடத்தை விதிமுறைகளை மீறியதாக இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், இலங்கை வீரர் சண்டிமாலுக்கு ஒரே ஒருநாள் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை வீரர் தம்மிக்க பிரசாத், திரிமன்னே ஆகியோருக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 50% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இஷாந்த் சர்மாவுக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் நடைபெறவுள்ள தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக இரண்டாவது டெஸ்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக இந்திய வீரர் இஷாந்த சர்மாவுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 65% அபராதம் விதிக்கப்பட்டது.

அதேபோல், நடுவர் தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காக இலங்கை வீரர் திரிமண்ணேவுக்கு போட்டிக்கட்டணத்தில் இருந்து 30 % அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, September 1, 2015, 21:13 [IST]
Other articles published on Sep 1, 2015
English summary
Ishant Sharma and Dinesh Chandimal have been handed one-match suspensions for behaviour that breached the ICC code of conduct during the SSC Test, while Dhammika Prasad and Lahiru Thirimanne were fined 50% of their match fees.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X