For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

65 டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகள்.. இஷாந்த் ஷர்மா புது சாதனை!

By Veera Kumar

கொழும்பு: டெஸ்ட் போட்டிகளில் 200 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 4வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இஷாந்த் ஷர்மா பெற்றார். முன்னதாக, கபில்தேவ், ஸ்ரீநாத் மற்றும் ஜாகீர் கான் ஆகியோர் இந்த மைல் கல்லை எட்டியிருந்தனர்.

இலங்கைக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளான இன்று, முக்கிய கட்டத்தில், இலங்கை கேப்டன் மேத்யூஸ் விக்கெட்டை எல்.பி.டபிள்யூ முறையில் வீழ்த்தினார் இஷாந்த் ஷர்மா. இது ஷர்மா வீழ்த்திய 200வது டெஸ்ட் விக்கெட்டாகும்.

Ishant Sharma becomes 4th Indian paceman to take 200 Test wickets

முன்னதாக, கபில் தேவ், ஜவகல் ஸ்ரீநாத், ஜாகீர் கான் ஆகிய இந்திய பவுலர்கள் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர்களாகும். ஸ்பின்னர்களையும் சேர்த்தால், இஷாந்த், அதிக விக்கெட் எடுத்த இந்தியாவின் 8வது பவுலராகும்.

2007ல் டாக்காவில் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் களம் கண்ட இஷாந்த் 65 போட்டிகளில் இந்த மைல் கல்லை எட்டிப்பிடித்துள்ளார்.

இந்திய டாப் பவுலர்கள்:

அனில் கும்ப்ளே 619 விக்கெட்டுகள் (132 போட்டிகள்)

கபில் தேவ் 434 விக்கெட்டுகள் (131 போட்டிகள்)

ஹர்பஜன் சிங் 417 விக்கெட்டுகள் (103 போட்டிகள்)

ஜாகீர் கான் 311 விக்கெட்டுகள் (92 போட்டிகள்)

பிஷன் சிங் பேடி 266 விக்கெட்டுகள் (67 போட்டிகள்)

பக்வத் சந்திரசேகர் 242 விக்கெட்டுகள் (58 போட்டிகள்)

ஜவகல் ஸ்ரீநாத் 236 விக்கெட்டுகள் (67 போட்டிகள்)

இஷாந்த் ஷர்மா 200 விக்கெட்டுகள் (65 போட்டிகள்)

எரப்பள்ளி பிரசன்னா 189 விக்கெட்டுகள் (49 போட்டிகள்)

வினோ மன்கட் 162 விக்கெட்டுகள் (44 போட்டிகள்).

Story first published: Tuesday, September 1, 2015, 18:36 [IST]
Other articles published on Sep 1, 2015
English summary
Ishant is the 4th Indian paceman in the 200-wicket club. The other 3 are Kapil Dev, Zaheer Khan and Javagal Srinath. Overall, Ishant is 8th in the highest wicket-takers list for India. The 26-year-old Ishant made his Test debut against Bangladesh in Dhaka in 2007. So far he has played 65 matches.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X