For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அந்த "ரிதம்".. அதுதான், அதுக்குத்தான் காத்திருந்தேன்... அஸ்வின் அழகுப் பேச்சு!

நார்த் சவுண்ட், ஆன்டிகுவா: சரியான ரிதம் கிடைக்க வேண்டும். அது மட்டும் கிடைத்து விட்டால் அசத்தி விடலாம். அதுதான் ஆன்டிகுவாவில் நடந்தது என்று இந்திய சுழற்புயல் ஆர். அஸ்வின் கூறியுள்ளார்.

ஆன்டிகுவா டெஸ்ட்டில் அஸ்வின் அசத்தி விட்டார். பேட்டிங்கில் சதம் போட்ட அவர், பந்து வீச்சிலும் பிரித்து மேய்ந்து மேற்கு இந்தியத் தீவுகள் அணியை நிலை குலைய வைத்து விட்டார்.

மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது, 7 விக்கெட்களை வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகளை சுருட்டிப் போட்டார் அஸ்வின்.

வேகம் சூப்பர்

வேகம் சூப்பர்

மேன் ஆப் தி மேட்ச் ஆக தேர்வு செய்யப்பட்ட அஸ்வின் போட்டிக்குப் பின்னர் பேசுகையில் நமது அணியின் வேகப் பந்து வீச்சாளர்கள் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக செயல்பட்டனர். அதுதான் நமக்கு முக்கியம்.

 ரிதம் சரியில்லை

ரிதம் சரியில்லை

எனக்கு முதல் இன்னிங்ஸில் ரிதம் சரியாக இல்லை. இதனால்தான் நீண்ட நேரம் நான் பந்து வீச முடியவில்லை. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸ் எனக்கு சாதகமாக அமைந்தது.

கும்ப்ளேவுக்கு நன்றி

கும்ப்ளேவுக்கு நன்றி

முதல் இன்னிங்ஸ் முடிவில் நான் அனில் கும்ப்ளேவிடம் பேசினேன். அவர் சில டிப்ஸ் கொடுத்தார். அவருடன் நடத்திய விவதாம் உதவியாக இருந்தது. அதை செய்து பார்த்தேன். 2வது இன்னிங்ஸ் பிரமாதமாக அமைந்தது.

ரிதம் சரியாக வந்து விட்டால் போதும்

ரிதம் சரியாக வந்து விட்டால் போதும்

ரிதம் மட்டும் சரியாக வந்து விட்டால் போதும். அசத்தி விடலாம். அதுதான் 2வது இன்னிங்ஸில் நடந்தது. எல்லாமே சரியாக வந்தால் முடிவும் சிறப்பாகவே இருக்கும் என்றார் அஸ்வின்.

வெளிநாட்டில் பெஸ்ட்

வெளிநாட்டில் பெஸ்ட்

ஆசியாவுக்கு வெளியே அஸ்வின் எடுத்த முதல் 5 விக்கெட் இதுதான். அதேபோல அவரது சிறந்த பந்து வீச்சும் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, July 25, 2016, 11:06 [IST]
Other articles published on Jul 25, 2016
English summary
Man of the Match R Ashwin is happy about the result of the first test match between India and West Indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X