For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனது கேப்டன் திறமையை மதிப்பிட இப்ப என்ன அவசரம்?.. கேட்கிறார் கோஹ்லி

எனது கேப்டன் திறமையை மதிப்பிட தற்போது ஒரு அவசரமும் இல்லை. 5 ஆண்டுகள் கழித்து அதைச் செய்யுங்கள் என்று இந்திய டெஸ்ட் கேப்டன் விராத் கோஹ்லி தெரிவித்தார்.

By Lakshmi Priya

புனே: டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக எனது திறமையை மதிப்பிட இப்போது என்ன அவசரம் என்று விராத் கோஹ்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

புனேயில் முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்கவுள்ளது. இதை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார் கோஹ்லி. அப்போது தனது கேப்டன் பதவி குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

கோஹ்லி பேட்டியின்போதுகூறுகையில், ஒவ்வொரு தொடருக்குப் பிறகும் என்னை மதிப்பீடு செய்ய மாட்டேன். போட்டிகளில் வெற்றி பெறுவதையே முதல் குறிக்கோளாக வைத்துள்ளேன். விளையாட்டு மட்டுமல்ல எந்த அணியாக இருந்தாலும் அந்த அணியின் செயல்பாடை பொறுத்தே அதன் கேப்டனின் திறமையும் மதிப்பிடப்படும்.

அணி முதிர்ந்தால் சிறப்பு

அணி முதிர்ந்தால் சிறப்பு

அணி முதிர்ச்சி அடைய அடைய அந்த அணியின் கேப்டன் சிறந்தவராக மற்றவர்களால் கருதப்படுவர் என்பது என்னுடைய கருத்து. அணி சரியாக ஆடாத போது தலைமைத்துவம் என்பது கட்டுப்பாட்டை இழக்கும். எனவே இந்திய அணியின் கேப்டனாகவே அடுத்த 5 முதல் 8 ஆண்டுகளுக்கு நானே தொடர்ந்தால் எனது தலைமைத்துவத்தை மதிப்பீடு செய்வேன்.

செய்யாததை மதிப்பிட வேண்டும்

செய்யாததை மதிப்பிட வேண்டும்

அணியின் கேப்டனாக என்ன செய்தேன் அல்லது என்ன செய்யவில்லை என்பதை மதிப்பிட இது மிகவும் முதற்கட்டமாகும். பேட்டிங்கின்போது தலைமைத்துவம் நம்மை மெத்தனமாக இருக்க அனுமதிக்காது. சில சூழ்நிலைகளில் நாம் கூடுதல் கவனம் செலுத்துவோம், கூடுதல் பொறுப்பில்லாவிட்டால் நாம் அதைச் செய்யாமல் கூட போய் விடலாம். ஒரு தளர்வான ஷாட்டில் ஆட்டமிழக்கவும் வாய்ப்புள்ளது.

பேட்டிங்கில் ஸ்மித் கலக்கல்

பேட்டிங்கில் ஸ்மித் கலக்கல்

ஆனால் தலைமைத்துவம் என்ற மெத்தனத்தை என்னிடமிருந்து எடுத்து விட்டதால் கூடுதல் பொறுப்பு காரணமாக கூடுதல் கவனம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒரு விஷயம்தான் எனக்கும் சரி ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்மித்துக்கும் சரி கைகொடுத்து வருகிறது என்று கருதுகிறேன். ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங்கில் சீராக ரன்களை குவித்து வருகிறார். கேப்டனாகவும் அவர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார். இங்கு போல்தான் அங்கும் கேப்டன் பொறுப்பு அவரிடம் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம்பர் 1 யாரு?

நம்பர் 1 யாரு?

இது அவரது ஆட்டத்தில் வெளிப்படுகிறது. அவர் நெம்பர் 1 டெஸ்ட் வீரராக இருப்பதற்கு காரணம் இருக்கிறது. பயிற்சி அகாதெமியில் அவரைப் பார்த்த போது அவர் ஆதிக்கம் செலுத்தும் பேட்ஸ்மெனாக இல்லை, லெக்ஸ்பின்னராக கரியரைத் தொடங்கி பெரிய பேட்ஸ்மெனாக அவர் மாறியிருப்பது அபாரமான சாதனையாகும்.

நான் கவனமாக இருக்கிறேன்

நான் கவனமாக இருக்கிறேன்

என்னுடைய ஆட்டம் எந்த நிலையில் உள்ளது என்பதில் நான் தன்னம்பிக்கையுடன் உள்ளேன். சிலர் கருத்துகளை எழுதுகின்றனர், அது அவர்கள் வேலை, அதனை நான் கட்டுப்படுத்த முடியாது. நான் என் ஆட்டத்தில் கவனமாக இருக்கிறேன், அதுதான் எனக்கு இப்போது முதல் கவனம் என்று பல சுவாரஸ்யமான தகவல்களை விராத் கோஹ்லி தெரிவித்தார்.

Story first published: Wednesday, February 22, 2017, 17:01 [IST]
Other articles published on Feb 22, 2017
English summary
I wont judge my captaincy now, will only do after 5 years if I stay in that position till then, says Kohli
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X