For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியும் கிடையாது, வில்லியர்ஸும் கிடையாது.. ரூட்தான் "பெஸ்ட்".. முகம்மது யூசுப் "தீர்ப்பு"!

கராச்சி: விராத் கோஹ்லியை சிறந்த பேட்ஸ்மேன் என்று சொல்ல முடியாது. இங்கிலாந்தின் ஜோ ரூட்தான் சிறந்த வீரர் என்று கூறியுள்ளார் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் முகம்மது யூசுப்.

இப்போதைக்கு சர்வதேச அளவில் ஜோ ரூட்தான் தலை சிறந்த பேட்ஸ்மேன் என்பதும் யூசுப்பின் கருத்தாகும். கோஹ்லியோ, இல்லை ஏப் டிவில்லியர்ஸோ சிறந்தவர்கள் கிடையாது என்றும் அடித்துக் கூறுகிறார் யூசுப்.

பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட் அடித்த 254 ரன்களே அவரது திறமையைச் சொல்லும் என்றும் யூசுப் ஆதாரம் காட்டுகிறார்.

எல்லாவற்றிலும் ரூட்டுதான் பெஸ்ட்டு!

எல்லாவற்றிலும் ரூட்டுதான் பெஸ்ட்டு!

யூசுப் இதுகுறித்துக் கூறுகையில் டி20, டெஸ்ட், ஒரு நாள் போட்டி என மூன்று வகையான போட்டிகளிலும் ஜோ ரூட்தான் பெஸ்ட். அவரது சமச்சீரான ஆட்டம், ஷாட்டுகளைத் தேர்வு செய்யும் விதம், அவரது டைமிங் எல்லாமே அட்டகாசமாக இருக்கிறது.

போட்டாரே டபுள் சதம்

போட்டாரே டபுள் சதம்

பாகிஸ்தானுக்கு எதிரான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த இரட்டை சதம் அபாரமானது. அருமையானது. இது ஒன்றே போதும் அவர்தான் சிறந்தவர் என்பதை நிரூபிக்க.

கிளாஸ் வீரர்

கிளாஸ் வீரர்

சில ஆண்டுகளாக ஜோ ரூட் ஆடி வருகிறார். ஆனால் அதற்குள்ளாகவே அவரது தரமான ஆட்டத்தை உலகம் பார்த்து விட்டது. அவரது பேட்டிங் சராசரி அசத்தலாக உள்ளது.

கோல்ஹி - டிவில்லியர்ஸ் ஓகேதான்

கோல்ஹி - டிவில்லியர்ஸ் ஓகேதான்

கோஹ்லி, டிவில்லியர்ஸ் தரமான வீரர்கள் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அவர்களை விட ரூட்தான் மிகச் சிறந்தவர். எனது தனிப்பட்ட கருத்து இது.

மூன்று பேருமே அசத்துவார்கள்

மூன்று பேருமே அசத்துவார்கள்

மூன்று வகையான கிரிக்கெட்டிலும் திறமையாக விளையாடக் கூடிய தன்மையும், தகுதியும் இந்த மூன்று வீரர்களிடமும் இருப்பது ஒரு ஒற்றுமையாகும். அதை மறுக்க முடியாது.

சச்சின் - லாரா சண்டை மாதிரி!

சச்சின் - லாரா சண்டை மாதிரி!

முன்பு சச்சின் பெரியவரா, லாரா பெரியவரா என்ற பஞ்சாயத்து நீண்ட காலத்துக்கு ஓடிக் கொண்டிருந்தது. தற்போது அது கோஹ்லியா, டிவில்லியர்ஸா, ரூட்டா என்று ரூட் மாறி வருவது போலத் தெரிகிறதுது.

Story first published: Tuesday, July 26, 2016, 12:47 [IST]
Other articles published on Jul 26, 2016
English summary
Former Pakistan captain Muhammad Yousuf has declared England's Joe Root as currently the best batsman in the world. Overlooking India's run machine Virat Kohli and South African AB de Villiers, Yousuf said that he believed Root was the the best in the world at the moment after his monumental 254 against Pakistan in the second Test at Manchester.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X