For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இதெல்லாம் விளையாட்டில் சாதாரணமப்பா.. கோஹ்லிக்கு டிராவிட் வக்காலத்து!

By Veera Kumar

மெல்போர்ன்: உலகக் கோப்பை அரையிறுதியில் சரியாக விளையாடாத விராட் கோஹ்லிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார் முன்னாள் நம்பிக்கை நட்சத்திர வீரர் ராகுல் டிராவிட்.

ஆஸ்திரேலியாவுக்கு வந்து அந்த அணிக்கு எதிராக விராட் கோஹ்லி அளவுக்கு சிறப்பாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஒரு பேட்ஸ்மேனை என்னால் குறிப்பிட முடியவில்லை. அவருடைய மிகச்சிறந்த திறமையை நாம் பார்த்தோம்.

Kohli has been sensational in Australia: Dravid

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரையிறுதி போட்டியில் அவரால் சிறப்பாக, விளையாட முடியவில்லை. ஆனால், விளையாட்டில் இவையெல்லாம் சகஜம். இரண்டு சிறந்த அணிகள் இறுபோட்டியில் மோதின. இரு அணிகளுமே உள்ளூரில் சிறப்பாக ஆடியவைதான்.

இந்திய அணி தங்களால் முடிந்த வரை சிறப்பாகச் செயல்பட்டனர். அரையிறுதி வரை வருவது கடினமானதே. இந்திய அணி, ஒரு இளம் அணியாக உள்ள நிலையில், ஆஸ்திரேலிய தடையை கடக்க முடியாமல் தோற்றதில் பெரிய வியப்பு இல்லை.

இவ்வாறு டிராவிட் தெரிவித்தார்.

Story first published: Monday, March 30, 2015, 17:04 [IST]
Other articles published on Mar 30, 2015
English summary
Dismissing criticism against Virat Kohli for his early dismissal in the World Cup semifinal against Australia, former Indian cricket captain Rahul Dravid said barring the one blip, the star batsman has been sensational Down Under. "We have short memory. He did play his absolute best at the Test matches. In fact, he was sensational," Dravid said on the sidelines of an event here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X