For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியே கேப்டனா இருக்கட்டும்.. டோணி ஜாலியா ஆடட்டும்.. ரவி சாஸ்திரி "ரோசனை"!

டெல்லி: அனைத்து வகை ஆட்டத்திற்கும் விராத் கோஹ்லியே கேப்டனாக செயல்படலாம். அதற்கான நேரம் வந்து விட்டது. ஒரே சாதாரண வீரராக டோணி தனது ஆட்டத்தை ரசித்து ஆட வாய்ப்பு தரலாம் என்று இந்திய அணியின் முன்னாள் இயக்குநர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் இதைத்தான் செய்திருப்பேன் என்றும் சாஸ்திரி கூறியுள்ளார்.

டோணி கிரிக்கெட்டை அனுபவித்து ஆடும் நேரம் வந்து விட்டது. கேப்டன் பொறுப்பை கோஹ்லியிடம் கொடுக்கும் நேரமும் வந்து விட்டது என்றும் சாஸ்திரி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் டிவி சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் மட்டும் இருந்திருந்தால்

நான் மட்டும் இருந்திருந்தால்

நான் தேர்வுக் குழுத் தலைவராக இருந்திருந்தால் டி20, டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளுக்கான அணிகளுக்கு கோஹ்லியையே கேப்டனாக்கியிருப்பேன். அந்த மாதிரிதான் நான் யோசித்திருப்பேன்.

சிந்திச்சுப் பாருங்க

சிந்திச்சுப் பாருங்க

இதுகுறித்து சிந்திக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. கோஹ்லி அனைத்து வகையான அணிகளுக்கும் கேப்டனாக நியமிக்கப்பட வேண்டும். அடுத்த உலகக் கோப்பை 2019ல்தான் வருகிறது. இடையில் பெரிய தொடர்கள் எதுவும் இல்லை. எனவே இதுதான் சரியான நேரமாகும்.

அணியை சரியாக கட்டமைக்கலாம்

அணியை சரியாக கட்டமைக்கலாம்

அடுத்த உலகக் கோப்பைக்கு முன்பாக நமக்கு நிறைய காலம் உள்ளதால், கோஹ்லியை கேப்டனாக்கி உலகக் கோப்பைக்கு ஏற்ற வலுவான அணியை கட்டமைக்க இது நமக்கு நல்ல வாய்ப்பாகும்.

ஜாலியாக விளையாடட்டும்

ஜாலியாக விளையாடட்டும்

டோணி ஒரு வீரராக ஜாலியாக விளையாடட்டும். தனது விளையாட்டை எந்தவிதமான நெருக்கடியும் இல்லாமல் அவர் அனுபவித்த ஆட இது ஒரு நல்லவாய்ப்பு.

அருமையான வீரர்

அருமையான வீரர்

டோணி ஒரு அருமையான வீரர். அவரது திறமையை யாரும் பறித்து விட முடியாது. அந்த திறமையான ஆட்டத்தை முழுமையான முறையில் ரசித்துப் பார்க்க அவரிடமிருந்து கேப்டன் பதவியை எடுக்க வேண்டும். அவரும் அப்போதுதான் ரசித்து விளையாட வாய்ப்பு கிடைக்கும்.

வேற வழியில்லை

வேற வழியில்லை

முடிவெடுப்பது கஷ்டம்தான். ஆனால் வேறு வழியில்லை. முடிவெடுக்காவிட்டால் அது சிக்கலில்தான் போய் பின்னர் முடியும். இப்போது முடிவெடுப்பதே சரியானதாக இருக்க முடியும்.

ஆஸ்திரலியாவைப் பாருங்கள்

ஆஸ்திரலியாவைப் பாருங்கள்

ஆஸ்திரேலியாவில் ஸ்டீவ் வாக் நல்ல பார்மில் இருந்தபோதுதான் ரிக்கி பான்டிங் கண்டுபிடிக்கப்பட்டார். அவருக்கு அடுத்து மைக்கேல் கிளர்க் வந்தார். இப்போது ஸ்டீவ் ஸ்மித் இருக்கிறார். இதேபோல நமது அணியிலும் கேப்டன் மாற்றம் சீரிய முறையில் இருக்க வேண்டியது அவசியம் என்றார் சாஸ்திரி.

Story first published: Tuesday, May 31, 2016, 13:16 [IST]
Other articles published on May 31, 2016
English summary
Former Team Director of the Indian cricket team Ravi Shastri on Monday made it clear that had he been the chairman of selectors, he would have thought about making "Virat Kohli the captain in all three formats" and let Mahendra Singh Dhoni "enjoy his game".
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X