For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோஹ்லியின் கோபத்தை அடக்க ஒரு கோச் தேவை: முன்னாள் கேப்டன் பேடி

By Siva

டெல்லி: விராட் கோஹ்லியின் கோபத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஒரு பயிற்சியளார் தேவை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

டெஸ் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி டோணிக்கு நேர்எதிரானவர். டோணி கூலாக இருப்பார், கோஹ்லியோ எதற்கெடுத்தாலும் கோபப்பட்டு சண்டைக்கு பாய்வார். அவ்வாறு கோஹ்லி கோபப்பட்டு பல முறை பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில் கோஹ்லி பற்றி முன்னாள் கேப்டன் பிஷன் சிங் பேடி கூறுகையில்,

கோஹ்லி

கோஹ்லி

விராட்டுக்கு நல்ல பயிற்சியாளர் தேவை என நான் நம்புகிறேன். அவரை வழிநடத்தக் கூடிய ஒரு பயிற்சியாளரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நியமிக்க வேண்டும். மேலும் அவரின் கோபத்தையும் அந்த பயிற்சியாளர் கட்டுப்படுத்த வேண்டும்.

மாற்றம்

மாற்றம்

கோஹ்லி யோசிக்காமல் நடந்து கொள்கிறார். அந்த குணத்தை அவர் மாற்றிக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் என்பது கபடி, கோக்கோ போன்று அல்ல. நீண்ட காலம் கிரிக்கெட் விளையாட விரும்பினால் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

மீடியா

மீடியா

மீடியா தான் கோஹ்லிக்கு ஒரு இமேஜை உருவாக்கியது. அதே மீடியா அவரை அழித்துவிடும். அதனால் அவர் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அவரின் ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது. அவர் வலது கையில் ஸ்பூன் வைத்திருந்தாரா அல்லது இடது கையில் வைத்திருந்தாரா என்று கூறும் அளவுக்கு கவனிக்கப்படுகிறார்.

சச்சின்

சச்சின்

ரவி சாஸ்திரியும், கங்குலியும் கோஹ்லியை பார்க்கும் விதத்திற்கும் சச்சினும், டிராவிடும் பார்க்கும் விதத்திற்கும் வித்தியாசம் உள்ளது. ஐபிஎல் போட்டிகளால் பல இளம் வீரர்கள் குழம்பிய நிலையில் இருப்பதை காண்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, May 22, 2015, 13:02 [IST]
Other articles published on May 22, 2015
English summary
Former India captain Bishan Singh Bedi feels that BCCI needs to appoint a "strong coach" to guide the temperamental Test captain Virat Kohli, who has courted a lot of off-field controversies in recent times.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X