For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆரம்பத்துல அவங்க அசத்துனாங்க.. அப்புறம் நாங்க அமுக்கிட்டோம்.. கோஹ்லி ஜாலி!

நார்த் சவுண்ட், ஆன்டிகுவா: இந்தியா தனது பேட்டிங்கின்போது மேற்கு இந்தியத் தீவுகள் சிறப்பாகவே பந்து வீசியது. ரன் எடுக்க சிரமமாக இருந்தது. இருந்தாலும் சிறப்பாக விளையாடி விட்டோம். பின்னர் பந்து வீச்சின் மூலமாக நாங்கள் அவர்களை எளிதாக மடக்க முடிந்தது என்று கூறியுள்ளார் கேப்டன் விராத் கோஹ்லி.

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆன்டிகுவா டெஸ்ட் போட்டியை இந்தியா ஒரு இன்னிங்ஸ், 92 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பாக வென்றுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், கேப்டன் கோஹ்லி போட்ட இரட்டை சதமும், அஸ்வினின் சிறப்பான ஆல் ரவுண்ட் ஆட்டமும்தான்.

இந்த நிலையில் வெற்றி குறித்து கேப்டன் கோஹ்லி போட்டியின் முடிவில் பேட்டி அளித்தார். அதில் வெற்றி குறித்து அவர் விவரித்தார்..

ஈஸியாக இல்லை

ஈஸியாக இல்லை

உண்மையில் நாங்கள் பேட் செய்தபோது ஈஸியாக இல்லை. ரன் எடுப்பது கஷ்டமாகவே இருந்தது.. அவர்கள் சிறப்பாகவே பவுல் செய்தனர். சில பந்து வீச்சாளர்கள் சவாலாகவும் இருந்தனர்.

தடுமாறினோம்

தடுமாறினோம்

70 ரன்கள் எடுத்த நிலையில் 2 பேரை இழந்தும் இருந்தோம். மீதமுள்ளவர்களில் 5 பேரிடம் பொறுப்பு போனது. ஷிகர் தவான் உண்மையிலேயே சிறப்பாக ஆடினார்.

பாசிட்டிவ் அப்ரோச்

பாசிட்டிவ் அப்ரோச்

அனைவரும் பாசிட்டிவாக இருங்கள் என்பது மட்டுமே எனது ஆசையாக இருந்தது. அதையே அவர்களும் கடைப்பிடித்தனர். டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டுமானால் விரைவாக ரன்கள் எடுக்க வேண்டும்.

அஸ்வின் வந்ததும் நிம்மதி

அஸ்வின் வந்ததும் நிம்மதி

கடைசியில் அஸ்வின் வந்து பிரமாதமான பேட்டிங்கைக் கொடுத்தார். கடை நிலையிலும் நாங்கள் ரன் எடுக்க முடிந்தது எங்களுக்குப் பெரும் வசதியாக போய் விட்டது.

அஸ்வின் பந்து வீச்சாளரே அல்ல!

அஸ்வின் பந்து வீச்சாளரே அல்ல!

அஸ்வின் முதலில் நல்ல பேட்ஸ்மேன். பிறகுதான் ஸ்பின்னர். பந்து வீச்சாளராவதற்கு முன்பு அவர் அருமையான பேட்ஸ்மேனாக இருந்தவர். அது இப்போது கை கொடுக்கிறது என்றார் கோஹ்லி.

Story first published: Monday, July 25, 2016, 11:28 [IST]
Other articles published on Jul 25, 2016
English summary
Indian captain Virat Kohli has said that it was a team performance in the first test against WI and praised Ashwin for his brilliant display.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X