For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உணர்ச்சிவசப்பட கூடாது.. கோஹ்லிக்கு அட்வைஸ் செய்வது சட்டையை கழற்றி சுற்றிய கங்குலி

விராட் கோஹ்லி உணர்ச்சிவசப்படக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை கூறியுள்ளார்.
 

By Kalai Mathi

டெல்லி: விராட் கோஹ்லி உணர்ச்சிவசப்படக்கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி அறிவுரை கூறியுள்ளார். அவர் உணர்ச்சிவசப்பட்டதாலேயே தான் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் ரன் குவிக்க முடியாமல் போனது என்றும் கங்குலி தெரிவித்துள்ளார்.

4 போட்டிகளை கொண்ட ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆனால் இந்தப் போட்டியில் கேப்டன் விராட் கோஹ்லி 5 இன்னிங்ஸ்களில் வெறும் 46 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.

Kohli's desire to win at any cost : Ganguly

4வது டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக விராட் கோஹ்லி விளையாடவில்லை இந்நிலையில் டெஸ்ட் தொடரில் விராட் கோஹ்லி ரன் குவிக்க முடியாமல் போனதற்கு அவர் உணர்ச்சி வசப்பட்டதே காரணம் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியுள்ளதாவது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வீராட்கோலி ரன் குவிக்க முடியாமல் போனதற்கு உணர்ச்சி வசப்பட்டதே காரணமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வெற்றி பெற வேண்டும் என்பதில் கேப்டனான வீராட்கோலி தீவிரமாக செயல்பட்டு உணர்ச்சி வசப்பட்டார்.

இனிவரும் போட்டிகளில் அவர் உணர்ச்சி வசப்படக்கூடாது. இதில் இருந்து அவர் பாடம் கற்று கொள்வார். இவ்வாறு கங்குலி விராட் கோஹ்லிக்கு அறிவுரை கூறியுள்ளார்.

Story first published: Saturday, April 1, 2017, 16:08 [IST]
Other articles published on Apr 1, 2017
English summary
Ganguly observed that Kohli's desire to win at any cost as a captain led to his outbursts.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X