For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கிரிக்கெட்டில் சச்சின் "அய்யா" என்றால் கோஹ்லி "சின்னய்யா".. !

இந்திய கிரிக்கெட்டில் சச்சினின் சாதனைகளை முறியடிக்க வந்துள்ள விராத் கோஹ்லி இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 3465 ரன்களைக் குவித்துள்ளார். இதில் 3 இரட்டை சதம், 11 சதம், 20 அரை சதங்கள் அடக்கமாகும்.

சென்னை: 2016ம் ஆண்டு கோஹ்லிக்கு மகத்தான ரன் ஆண்டாக மாறி விட்டது. இந்த ஆண்டில் மட்டும் அவர் 3465 ரன்களைக் குவித்துள்ளார். விளையாடியதோ 52 போட்டிகள்.

சச்சின் அடுத்த வாரிசு, சச்சினின் சாதனைகளை முறியடிக்க தகுதியான ஒரே வீரர் என்றெல்லாம் போற்றப்படுபவர் விராத் கோஹ்லி. கோஹ்லியின் பேட்டிங் இந்த ஆண்டு அபாரமாக இருந்தது என்பதை உலகமே பார்த்து அசந்து போனது.

இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளில் ஒரே ஆண்டில் 3 இரட்டைச் சதம் அடித்து புதிய வரலாறு படைத்துள்ளார் கோஹ்லி என்பது குறிப்பிடத்தக்கது.

10 ஒரு நாள் போட்டிகள்

10 ஒரு நாள் போட்டிகள்

விராத் கோஹ்லி இந்த ஆண்டு 10 ஒரு நாள் போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் ஆஸ்திரேலியாவில் நடந்த அந்த அணிக்கு எதிரான 5 ஒரு நாள் போட்டிகளில் அவர் 381 ரன்களைக் குவித்தார். இந்தியாவில் நியூசிலாந்துக்கு எதிராக நடந்த 5 ஒரு நாள் போட்டிகளில் 358 ரன்களை விளாசினார்.

11 டெஸ்ட்

11 டெஸ்ட்

11 டெஸ்ட் போட்டிகளில் இந்த ஆண்டு கோஹ்லி விளையாடியுள்ளார். இதில் மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக அங்கு நடந்த 4 டெஸ்ட் போட்டிகளில் அவர் 251 ரன்கள் எடுத்தார். அதில் இந்த ஆண்டில் தனது முதல் இரட்டை சதத்தை அவர் பதிவு செய்தார். நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகளில் ஆடி 309 ரன்களைக் குவித்தார். அதில் ஒரு இரட்டை சதமும் அடக்கம். இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 போட்டிகளில் ஆடி 551 ரன்களைக் குவித்துள்ளார். இதிலும் ஒரு இரட்டை சதம் அடக்கமாகும்.

டி20 போட்டிகள்

டி20 போட்டிகள்

உலகக் கோப்பை, ஐபிஎல், ஆசியா கோப்பை உள்பட மொத்தம் 31 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார் கோஹ்லி. இதில் மொத்தமாக 1614 ரன்களைக் குவித்துள்ளார். இதில் ஐபிஎல்லில் மட்டும் அவர் 973 ரன்களைக் குவித்தார்.

மொத்தம் 3465

மொத்தம் 3465

இந்த ஆண்டு மொத்தம் 52 போட்டிகளில் விளையாடியுள்ள விராத் கோஹ்லி, 3465 ரன்களைக் குவித்துள்ளார். பேட்டிங் சராசரி 86.63 சதவீதமாகும்.

11 ஃபுல்...20 ஹாஃப்!

இந்த ஆண்டு 11 சதம் போட்டுள்ள கோஹ்லி, 20 அரை சதங்களையும் விளாசியுள்ளார். அவரது பேட்டிங்கின் அபார திறமையை கண்டு வியந்த ரசிகர்கள். வரும் ஆண்டிலும் இதேபோல கோஹ்லி விளாச வேண்டும் என்று விருப்பப்படுகின்றனர்.

கிரிக்கெட்டில் சச்சின் "அய்யா" என்றால் கோஹ்லி "சின்னய்யா".. !

Story first published: Sunday, December 11, 2016, 12:34 [IST]
Other articles published on Dec 11, 2016
English summary
2016 was the dream year for Virat Kohli as he has slammed 3465 runs from 52 matches for India and IPL team RCB.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X