For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேஷ், பேஷ்.. நண்டுக்கறி ரொம்ப நல்லா இருக்கு.. கொழும்பில் கோஹ்லி அதகளம்!

By Veera Kumar

கொழும்பு: 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இலங்கையில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, அங்கு இலங்கை வீரர்கள் குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே இணைந்து நடத்தும், நண்டு ரெஸ்டாரண்டில் மூக்குபிடிக்க சாப்பிட்டு ஏப்பம் விட்டுள்ளார்.

சுற்றுப் பயணம்

சுற்றுப் பயணம்

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதையொட்டி, இந்திய அணி இலங்கை தலைநகர் கொழும்பு சென்று சேர்ந்துள்ளது. அங்கு தீவிர வலைப் பயிற்சியில் வீரர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

நண்டு கறி

இந்த கேப்பில், கிடா வெட்டியுள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி. நேற்றிரவு கொழும்பிலுள்ள 'Ministry of Crab' என்ற நண்டு ஸ்பெஷல் ரெஸ்டாரண்டுக்கு சென்று ஒரு பிடி பிடித்து ஏப்பம்விட்டுள்ளார் கோஹ்லி.

இலங்கை வீரர்கள்

இலங்கை வீரர்கள்

இந்த ரெஸ்டாரண்ட், இலங்கையின் பிரபல கிரிக்கெட் வீரர்களான குமார் சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனே ஆகியோரால் இணைந்து நடத்தப்படுகிறது. விரைவில் இந்தியாவிலும் இந்த ரெஸ்டாரண்டை திறக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

கோடான கோடி நன்றிகள்

கோடான கோடி நன்றிகள்

சாப்பிட்டு முடித்த கையோடு, டிவிட்டரில் குமார்சங்ககாரா மற்றும் ஜெயவர்த்தனேக்கு நன்றி சொல்லியுள்ளார் கோஹ்லி. இப்படித்தான் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இரவு நேரங்களில் காதலி அனுஷ்காவுடன் ரெஸ்டாரண்டுகளில் சுற்றி திரிந்தார் கோஹ்லி.

மனுஷன் வாழ்றாருய்யா என்ற புலம்பல் சத்தம் டிரெஸ்சிங் ரூமில் இருந்து கேட்க தொடங்கியுள்ளதாம்.

Story first published: Wednesday, August 5, 2015, 17:44 [IST]
Other articles published on Aug 5, 2015
English summary
India's Test captain Virat Kohli enjoyed a "smashing meal" last night at Colombo's "Ministry of Crab" restaurant which is owned by Sri Lanka's legendary duo of Kumar Sangakkara and Mahela Jayawardene.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X