For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐ.பி.எல். அரங்கில் ஒரே போட்டியில் பல சாதனைகள் படைத்த கம்பீர்!

By Karthikeyan

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கேப்டன் கம்பீர் ஐபிஎல் அரங்கில் ஒரே போட்டியில் பல சாதனைகளை படைத்துள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்றிரவு டெல்லி அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் லீக் போட்டியில் கம்பீர் பல சாதனைகளை படைத்தார். இந்த ஆட்டத்தில் கம்பீரும், உத்தப்பாவும் இணைந்து 2-வது விக்கெட்டுக்கு 108 ரன்கள் சேர்த்தனர்.

 Kolkata Vs Delhi; Gambhir touches several milestones

ஐ.பி.எல்.போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்த 3-வது வீரர் என்ற பெருமையை பெற்றார் கம்பீர். 141 போட்டிகளில் பங்கேற்று 4,010 ரன்கள் குவித்துள்ளார் கம்பீர். குஜராத் லயன்ஸ் கேப்டன் ரெய்னா, 4,407 ரன்கள் குவித்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஐ.பி.எல். கேப்டனாக அதிக ரன்கள் எடுத்தவர் (3,311 ரன்) என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார் கம்பீர். இந்த வரிசையில் டோணி 3,270 ரன்களுடன் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

எல்லா வகையான 20 ஓவர் கிரிக்கெட்டையும் சேர்த்து 6 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய 13-வது வீரர், இந்திய அளவில் 4-வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். 20 ஓவர் கிரிக்கெட்டில் கம்பீர் 229 போட்டிகளில் பங்கேற்று 6,023 ரன்கள் குவித்துள்ளார். ரெய்னா, கோஹ்லி, ரோகித் சர்மா ஏற்கனவே 6 ஆயிரம் ரன்களை கடந்துள்ளனர்.

Story first published: Saturday, April 29, 2017, 19:13 [IST]
Other articles published on Apr 29, 2017
English summary
Here are the highlights from the league match between Kolkata Knight Riders and Delhi Daredevils in the Indian Premier League 2017.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X