For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பந்தை எறிகிறாரா வெஸ்ட் இன்டீஸ் வீரர் பிராத்வெயிட்?

By Staff

பிர்மிங்ஹாம்: வெஸ்ட் இன்டீஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் கிரெய்க் பிராத்வெயிட் பந்துவீசும் முறை, விதிகளுக்கு அப்பாற்பட்டதாக உள்ளதாக, புதிய சர்ச்சை எழுந்துள்ளது.

மூன்று டெஸ்ட்கள் கொண்ட தொடரில், இங்கிலாந்து எதிராக விளையாடி வருகிறது வெஸ்ட் இன்டீஸ் கிரிக்கெட் அணி. முதல் டெஸ்ட்டில், ஒரு இன்னிங்ஸ், 209 ரன்கள் வித்தியாசத்தில், இங்கிலாந்து அணி வென்றுள்ளது.

Brathwaite in bowling controversy


முதல் டெஸ்ட்டில், வெஸ்ட் இன்டீஸ் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான கிரெய்க் பிராத்வெயிட், ஆறு ஓவர்களை வீசினார். இதில், 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

போட்டியின் முடிவுக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி., ஒரு அறிக்கை அளித்துள்ளது. அதில், 24 வயதாகும் பிராத்வெயிட் பந்துவீசும் முறை, விதிகளுக்கு அப்பாற்பட்டு, பந்தை எறியும் முறையில் உள்ளதாகக் கூறியுள்ளது. இது குறித்து, 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி முடிவு அறிக்கப்படும் என்றும், ஐ.சி.சி. கூறியுள்ளது.

அதுவரை, சர்வதேசப் போட்டிகளில் பந்து வீச அவருக்கு எந்தத் தடையும் இல்லை. அதனால், இங்கிலாந்து அணியுடன் வரும், 25ல் துவங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் பந்து வீச எந்தத் தடையும் இல்லை.

வெஸ்ட் இன்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான பிராத்வெயிட், அவ்வப்போது, பவுலிங்கும் செய்வார். இதுவரை, 38 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 12 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இலங்கைக்கு எதிராக, 2015ல் நடந்த டெஸ்ட் போட்டியின்போது, 29 ரன்களுக்கு அவர் 6 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.

தற்போது அவருடைய பந்து வீசும் முறை கேள்விக்குறியாகி உள்ளது.
Story first published: Monday, August 21, 2017, 19:10 [IST]
Other articles published on Aug 21, 2017
English summary
West Indies Kraigg Brathwaite repoted for suspected bowling action during the England tour
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X