For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருப்பா இந்த ஓ'கீப்.. இத்தனை நாளா எங்க இருந்தாரு?

By Veera Kumar

புனே: யாருப்பா இந்த ஓ'கீப், என்று ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார் ஆஸ்திரேலியாவின் இந்த புதிய, இடது கை சுழற்பந்து வீச்சாளர்.

இந்தியாவின் இரு இன்னிங்சுகளிலும் தலா 6 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இரு இன்னிங்சுகளிலும் சொல்லி வைத்தாற்போல தலா 35 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார் ஓ'கீப்.

Left-arm spinner Steve O’Keefe picked up 12 wickets to guide Australia

இந்திய மண்ணில் இப்படி ஒரு அச்சுறுத்தும் பந்து வீச்சை ஷேன் வார்ன், மெக்ராத் கூட காண்பிக்க முடியவில்லை. ஓ'கீப் அந்த சாதனையை படைத்துள்ளார்.

2012ம் ஆண்டு, இங்கிலாந்துக்கு எதிராக கொல்கத்தாவில் தோற்ற பிறகு, 20 போட்டிகளுக்கு பிறகு, இந்தியா தற்போதுதான் ஒரு உள்ளூர் போட்டியில் தோற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம், 32 வயதாகும் இந்த ஓ'கீப் பந்து வீச்சுதான்.

ஸ்பின்னுக்கு சாதகமான பிட்சை உருவாக்கி ஆஸி.க்கு வெள்ளையடிக்கலாம் என நினைத்த பிசிசிஐக்கு முகத்தில் கரிபூசிவிட்டார் ஓ'கீப். போட்ட திட்டம் பின்னால் இந்தியாவையே பதம் பார்த்துவிட்டது. 5 போட்டிகள் மட்டுமே ஆடியுள்ள ஓ'கீப் என்ன பெரிதாக சாதித்து விடப்போகிறார் என்ற மெத்தனத்தில், ஆஸி. மூத்த ஸ்பின்னர் லையனை மட்டுமே கவனித்துக்கொண்டிருந்தனர் இந்திய பேட்ஸ்மேன்கள். ஆனால் சர்ப்ரைசாக விக்கெட்டை அள்ளிவிட்டார் ஓ'கீப்.

2014ம் ஆண்டுதான் சர்வதேச டெஸ்ட் அரங்கில் காலடி எடுத்து வைத்த ஓ'கீப் இன்னும் பல வருடங்களுக்கு ஆஸ்திரேலியாவின் ஸ்டார் ஸ்பின்னராக மதிக்கப்படுவார் என்பது. ஷேன் வார்னேயின் பூட்சுகளை அணிய ஆளில்லாமல் தவித்த ஆஸ்திரேலிய அணிக்கு ஓ'கீப் வராத வந்த மாமணியா என்பது அடுத்து வரும் போட்டிகளில் தெரிந்துவிடும்.

Story first published: Saturday, February 25, 2017, 18:20 [IST]
Other articles published on Feb 25, 2017
English summary
Left-arm spinner Steve O’Keefe picked up 12 wickets to guide Australia to a first win in India since 2004.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X