For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரெக்கார்டுகளை "தெறி"க்க விட்ட கோஹ்லி!

பெங்களூரு: 2016ம் ஆண்டு ஐபிஎல் தொடர் முற்றிலும் விராத் கோஹ்லிக்கானதாக மாறிப் போய் விட்டது. அதில் யாருக்குமே சந்தேகம் வேண்டாம். தொடரின் தொடக்கம் முதல் முடிவு வரை கோஹ்லியின் முத்திரை பதியாத ஆட்டமே இல்லை என்று கூறலாம்.

அந்த அளவுக்கு கோஹ்லியின் ஆதிக்கம்தான் இந்த தொடர் முழுமையும் நிரம்பி வழிந்தது. போகிற போக்கில் பல சாதனைகளையும் படைத்து விட்டுப் போயுள்ளார் கோஹ்லி.

இந்தியாவின் லேட்டஸ்ட் ரன் மெஷினாக மாறியுள்ள கோஹ்லி தொட்டதெல்லாம் ரெக்கார்டுதான் என்றாலும் ஐபிஎல் தொடரில் ஏகப்பட்ட சாதனைகளைப் போட்டு விட்டுப் போயுள்ளார் மனிதர்.

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்

ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள்

ஒரு தொடரில் அதிக ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கோஹ்லி. மொத்தம் 973 ரன்களை அவர் குவித்தார். 27 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் 1000 ரன்கள் என்ற இமாலய சாதனையை அவர் படைத்திருக்கலாம்.

டி20/ஒருநாள் தொடரில் அதிக ரன்கள்

டி20/ஒருநாள் தொடரில் அதிக ரன்கள்

கோஹ்லி எடுத்த 973 ரன்கள் என்பது ஐபிஎல்லில் மட்டுமல்ல, எந்த ஒரு டி20 மற்றும் ஒரு நாள் போட்டித் தொடரிலும் ஒரு வீரர் எடுத்த அதிகபட்சம் ரன்களும் இதுதான்.

டெஸ்ட்டில் பிராட்மேன்தான் டாப்

டெஸ்ட்டில் பிராட்மேன்தான் டாப்

அதேசமயம் டெஸ்ட் வரலாற்றில் ஒரு தொடரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் சாதனை டான் பிராட்மேனிடம் உள்ளது. அவர் 1930 ஆஷஸ் தொடரில் 974 ரன்களைக் குவித்திருந்தார். அதாவது கோஹ்லி ஒரு ரன் கூடுதலாக எடுத்திருந்தால் இதை சமன் செய்திருக்கலாம். 2 கூடுதலாக எடுத்திருந்தால் முறியடித்திருக்கலாம்.

ஐபிஎல்லில் அதிக ரன்கள்

ஐபிஎல்லில் அதிக ரன்கள்

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களைக் குவித்த வீரர் கோஹ்லிதான். மொத்தம் 4110 ரன்களைக் குவித்துள்ளார்.

ஒரு தொடரில் அதிக சதம்

ஒரு தொடரில் அதிக சதம்

ஒரு ஐபிஎல் தொடரில் அதிக சதம் போட்ட வீரர் கோஹ்லிதான். மொத்தம் 4 சதங்களை இந்தத் தொடரில் அவர் விளாசினார். மேலும் அதிக சதங்களை வீசிய ஒரே கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லிக்கே கிடைத்துள்ளது.

ஒரு ஓவரில் அதிக ரன்கள்

ஒரு ஓவரில் அதிக ரன்கள்

ஒரு ஓவரில் ஒரு வீரர் எடுத்த அதிகபட்ச ரன்கள் என்ற சாதனையும் கோஹ்லிக்கே வந்துள்ளது. குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஷிவில் கெளசிக்கின் ஓவரில் 30 ரன்களை விளாசினார் கோஹ்லி.

9வது தொடரில் அதிக சிக்ஸர்கள்

9வது தொடரில் அதிக சிக்ஸர்கள்

9வது ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் விளாசிய சாதனையும் கோஹ்லிக்கே. மொத்தம் 38 சிக்ஸர்களை கோஹ்லி பறக்க விட்டிருந்தார்.

அதிக சராசரி

அதிக சராசரி

அதேபோல 9வது ஐபிஎல் தொடரில் அதிகபட்ச சராசரியும் கோஹ்லிக்கே. 81.08 சதவீத சராசரியை அவர் இந்தத் தொடரில் வைத்திருந்தார்.

அதிக அரை சதம்

அதிக அரை சதம்

இந்த தொடரில் அதிக அரை சதம் வீழ்த்தியவர்கள் வரிசையில் 17 போட்டிகளில் 17 அரை சதம் என்று வார்னர் முதலிடத்தில் இருக்கிறார். அதேசமயம், கோஹ்லி 16 போட்டிகளில் 16 அரை சதம் போட்டார்.

3 முறை 500 ரன்களைக் கடந்த முதல் கேப்டன்

3 முறை 500 ரன்களைக் கடந்த முதல் கேப்டன்

3 ஐபிஎல் தொடர்களில் 500 ரன்களைக் கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லிக்கே போகிறது. அவர் 2013 தொடரில் 634 ரன்களையும், 2015 தொடரில் 505 ரன்களையும், 2016 தொடரில் 973 ரன்களையும் குவித்தார்.

மொத்த ரன்கள் 6445

மொத்த ரன்கள் 6445

ஒட்டுமொத்தமாக அனைத்து வகை டி20 போட்டிகளிலும் சேர்த்து விராத் கோஹ்லி 6445 ரன்களைக் குவித்துள்ளார். இந்திய வீரர்கள் வரிசையில் இதுதான் அதிகபட்சமாகும்.

Story first published: Monday, May 30, 2016, 18:26 [IST]
Other articles published on May 30, 2016
English summary
Here is the list of records broken by 'run machine' Virat Kohli during IPL 2016.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X