For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

வீச்சலகு... வெற்றலகு.. எகிறன்... கொக்கியடி.. - என்ன இதெல்லாம்? வாங்க பழகலாம்!

By Shankar

ஒருவர் தன் மொழிக்குச் செய்கிற உண்மையான சேவை, எழுதிக் குவிப்பது அல்ல, புதுப்புது வார்த்தைகளை உருவாக்கி மொழிக்கு வளம் சேர்ப்பதுதான்.

இதைத்தான் மகாகவி பாரதியார் காலமெல்லாம் வலியுறுத்தினார். புதுப்புது வார்த்தைகள் உருவாக்கமும், பிற நாட்டு இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருவதையும் மிக முக்கியமானதாகக் கருதினார்.

Magudeswaran creates a new Tamil dictionary for Cricket

நவீன தமிழ் இலக்கிய உலகில் அந்தப் பணியைச் சத்தமின்றி செய்து வருகிறார் கவிஞர் மகுடேஸ்வரன். தமிழ் இலக்கணத்தை மிக எளிய முறையில் இணையத்தில் எழுதிவரும் அவர், அவ்வப்போது, ஆங்கிலப் வார்த்தைகளுக்கு புதுப்புது தமிழ்ச் சொற்களை உருவாக்கிப் பதிவு செய்து வருகிறார்.

Magudeswaran creates a new Tamil dictionary for Cricket

ஆங்கிலேயர்களின் விளையாட்டுதான் என்றாலும் இன்று தமிழர்தம் வாழ்வில் தவிர்க்க முடியாத அம்சமாகிவிட்டது மட்டைப் பந்தாட்டம் அல்லது துடுப்பாட்டம் எனப்படும் கிரிக்கெட். இந்த விளையாட்டில் அடிக்கடி பயன்படுத்தப்படும் பதங்களுக்கு - சொற்களுக்கு இணையான இனிய தமிழ்ச் சொற்களை மகுடேஸ்வரன் உருவாக்கியுள்ளார்.

Magudeswaran creates a new Tamil dictionary for Cricket

நடைமுறையில் புழங்குவதற்கு ஏதுவான சிக்கன சொற்களாகவும் உச்சரிக்க எளிமையாகவும் அமைந்திருப்பது இந்த புதுச் சொற்களின் சிறப்பு. அவை...

கிரிக்கெட் விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஆங்கிலச் சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்கள் :

Over = வீச்சலகு
Pitch = வீசுகளம்
Out = ஆட்டமிழப்பு
Wicket = முக்குச்சி
Middle Stump = நடுக்குச்சி
Out Swinger = வெளிநாட்ட வீச்சு
Inswinger= உள்நாட்ட வச்சு
Maiden Over = வெற்றலகு
Wicket Maiden = வீழ்வெற்றலகு
Leg Side = கால்புறம்
Off Side = எதிர்ப்புறம்
Wicket Keeper = முக்குச்சிக்காரன்
Boundary = எல்லை
One Step Forward = முன்கால்வைப்பு
Square Cut = செந்திருப்பு
Run = ஓட்டம்
Bowler = பந்தாள்
Batsman = மட்டையாள்
All Rounder = முழுவல்லார்
Fielder = களத்தர்
Bouncer = எகிறன்
Hook Shot = கொக்கியடி
Sweep Shot = துடுப்பு வலிப்படி
Pull Shot = இழுப்படி
Straight Drive = நேர்செலுத்தடி
Yorker = நேர்க்கூர் எறி
Leg Spin = வெளிவிலகுச் சுழல்
Off Spin = உள்விலகுச் சுழல்
Sixer = ஆறடி
Four = நான்கடி
Century = நூற்றீடு
Half Century = அரை நூற்றீடு
Commentry = நிகழ்சொற்றி
Commentator = நிகழ்சொற்றியர்
Appeal = முறையீடு
Run Rate = ஓட்ட ஈட்டுகை
Asking Rate = வேட்பீட்டுகை
Attacking Shot = தாக்கடி
Attacking Field = இறுக்கக் களம்
Back Foot = பின்கால்
Bail = குருத்து
Duck Out = சுழிப்பலி
Doosra = பிறழ்சுழல்
Run Out = ஓடுபலி

LBW = கால்படுபலி

இன்னும் உருவாக்க வேண்டிய சொற்கள் பல. இவற்றுள் சில, தமிழ் நிகழ்சொற்றியர் மத்தியில் புழக்கத்திலும் உள்ளன. வேண்டுமெனில் இவ்வாட்டத்தில் பயன்படுத்தப்படும் அனைத்துச் சொற்களுக்கும் செந்தமிழ்ச் சொற்களை ஆக்கித் தர இயலும்!

- கவிஞர் மகுடேசுவரன்

Story first published: Monday, March 23, 2015, 16:05 [IST]
Other articles published on Mar 23, 2015
English summary
Magudeswaran's new Tamil dictionary for Cricket explores many new meaningful words to Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X