For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆபீசுக்கு போன் போட்டு மோக்கா..மோக்கா பாடும் பாக்., வங்கதேச ரசிகர்கள்! கடுப்பில் பிசிசிஐ..!!

By Veera Kumar

மும்பை: இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்றதையடுத்து, நம்மிடம் உதை வாங்கிய, பாகிஸ்தான், வங்கதேச நாட்டு ரசிகர்களுக்கு கொண்டாட்டமோ, கொண்டாட்டம். இதனால், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு போன் செய்து மோக்கா.. மோக்கா என்று கேலி செய்து தங்களது வயிற்றெரிச்சலை தீர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்தியா லீக் போட்டியில் பாகிஸ்தானையும், காலிறுதியில் வங்கதேசத்தையும் எளிதில் வென்றது. எனவே, இந்தியா எப்போது தோற்கும் என்ற ஆசையில் இவ்விரு அணிகளும் காத்திருந்தன.

அரையிறுதியில் தோல்வி

அரையிறுதியில் தோல்வி

இந்நிலையில், 7 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வென்ற இந்தியா, அரையிறுதியில், ஆஸ்திரேலியாவிடம் 95 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று உலக கோப்பையை விட்டு வெளியேறியது.

மோக்கா..மோக்கா..

மோக்கா..மோக்கா..

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல், மும்பையிலுள்ள பிசிசிஐ தலைமை அலுவலகத்திற்கு தொடர்ந்து பல தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அவற்றை ஊழியர்கள் எடுத்து பேசினாலோ, மறுமுனையில், மோக்கா.. மோக்கா என்று பாடுவதும், இப்போ என்ன பண்ணுவீங்க என்று கேட்பதுமாக இருந்துள்ளது.

இப்படி பண்றீங்களேம்மா..

இப்படி பண்றீங்களேம்மா..

சுமார் 200 போன் அழைப்புகள் இதேபோல வந்ததால், பிசிசிஐ தற்காலிகமாக தொலைபேசி இணைப்பை துண்டித்து வைத்துள்ளதாம்.

இப்படி ஆகிப்போச்சே..

இப்படி ஆகிப்போச்சே..

இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "மோக்கா.. மோக்கா விளம்பரங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. ஆனால், அது எங்களை திருப்பி தாக்கும் என்று எதிர்பார்க்கவில்லை" என்றார்.

வங்கதேச வயிற்றெரிச்சல்

வங்கதேச வயிற்றெரிச்சல்

இந்த போன் அழைப்புகள் எங்கிருந்து வந்துள்ளன என்று பார்த்தபோது, அதில் பெரும்பாலும் வங்கதேசத்தில் இருந்தும், சில போன் அழைப்புகள், பாகிஸ்தானில் இருந்தும் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. "இதுபோல வெளிநாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியை சீண்டுவதற்காக யாரும் இதுவரை போன் செய்தது கிடையாது.. இதுதான் முதல் முறை" என்று பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதான் காரணம்

இதுதான் காரணம்

வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில், நடுவர் அலீம்தார் தவறான நோ-பால் தீர்ப்பளித்துவிட்டார் என்று கூறி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு எதிராக, அந்த நாட்டு பிரதமர் முதல், அந்த நாட்டை சேர்ந்தவரான ஐசிசி தலைவர் வரை திட்டி தீர்த்தனர். எனவே அந்த நாட்டு ரசிகர்கள் இந்தியா மீது வஞ்சம் வைத்திருந்தனர். பாகிஸ்தான் ரசிகர்களுக்கோ, காலிறுதியில் தங்களை வீழ்த்திய ஆஸ்திரேலியாவை இந்தியா ஜெயித்துவிட கூடாது என்ற ஆதங்கம்.

நாம ஒன்னு நினைச்சா..

நாம ஒன்னு நினைச்சா..

உலக கோப்பை கிரிக்கெட் தொடங்கும் முன்பாக, கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க இருந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் மோடி போன் செய்து, வாழ்த்து தெரிவித்து, நட்பை பலப்படுத்த முயன்றார். ஆனால், இப்போது, விளையாட்டாலே விபரீதங்கள் நடந்து கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, March 28, 2015, 14:40 [IST]
Other articles published on Mar 28, 2015
English summary
Heartbreak for India but joy for the neighbours. That is what happened on Friday after MS Dhoni and his men were knocked out of the ICC World Cup 2015.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X