For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

டி20 போட்டியில் அதிரடியாக அதிக ரன்கள்.. இங்கிலாந்தில் சாதனை படைத்த மெக்கல்லம்!

By Veera Kumar

லண்டன்: இங்கிலாந்து உள்நாட்டு டி20 கிரிக்கெட் போட்டியில் அதிரடியாக ரன் குவித்து புதிய சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரெண்டன் மெக்கல்லம்.

இங்கிலாந்தில் டி20 பிளாஸ்ட் என்ற பெயரில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மெக்கல்லம், வார்விக்ஷையர் அணிக்காக விளையாடி வருகிறார்.

மெக்கல்லம் அணி வெற்றி

மெக்கல்லம் அணி வெற்றி

நேற்று வார்விக்ஷையர் மற்றும் டெர்பைஷையர் அணிகள் பலப் பரிட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த வார்விக்ஷையர் அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 242 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து பேட் செய்த டெர்பைஷயர் அணியை 182 ரன்களுக்கு ஆல்-அவுட் செய்து 60 ரன்கள் வித்தியாசத்தில் வார்விக்ஷையர் அணி வெற்றி பெற்றது.

அதிரடி சதம்

அதிரடி சதம்

இந்த வெற்றிக்கு, முக்கிய காரணம், மெக்கல்லத்தின் அதிரடியாகும். அவர் 64 பந்துகளில், 158 ரன்களை அதிரடியாக குவித்தார். முன்னதாக, 42 பந்துகளில் சதம் கடந்தார் மெக்கல்லம். இந்த அதிரடியால் அவர் சார்ந்த வார்விக்ஷையர் அணி ரன்னை குவிக்க முடிந்தது.

இங்கிலாந்தில் சாதனை

இங்கிலாந்தில் சாதனை

டி20 பிளாஸ்ட் கிரிக்கெட் தொடரில், மெக்கல்லம் அடித்ததுதான் அதிக ரன் குவிப்பாகும். முன்நதாக, கடந்த ஆண்டு சுச்செக்ஸ் அணிக்காக, லூக் ரைட் அடித்த 153 ரன்கள்தான் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது. மேலும், மெக்கல்லம் தனது சாதனையை தானே சமன் செய்துள்ளார்.

தனது சாதனையை சமன் செய்தார்

தனது சாதனையை சமன் செய்தார்

2008ம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக ஐபிஎல் தொடரின்போது 73 பந்துகளில் 158 ரன்களை மெக்கல்லம் குவித்தார். ஆனால், இப்போது அதைவிட குறைந்த பந்துகளில் அதே ரன்னை குவித்துள்ளார். உலக அளவில் டி20 போட்டியொன்றில் அதிக ஸ்கோர் குவித்த பெருமைக்கு சொந்தக்காரர் கிறிஸ் கெய்ல் ஆகும்.

கிறிஸ் கெய்ல் டாப்

கிறிஸ் கெய்ல் டாப்

ஐபிஎல் 2013ம் ஆண்டு சீசனின்போது கிறிஸ் கெய்ல் 175 ரன்கள் விளாசியது இதுவரையில் சாதனையாக தொடருகிறது. ஆனால், மெக்கல்லம் இங்கிலாந்து மட்டத்திலான டி20யில் சாதனை படைத்ததுடன், உலக அலவில் கிறிஸ் கெய்லுக்கு அடுத்தபடியாக அதிக ரன் குவித்த வீரர் பட்டியலிலும் இடம் பிடித்துள்ளார்.

Story first published: Saturday, July 4, 2015, 13:07 [IST]
Other articles published on Jul 4, 2015
English summary
New Zealand captain Brendon McCullum's explosive hitting saw him set a new record in the English T20 Blast competition with a blistering 158 not out off 64 balls for his county Warwickshire. ever IPL game in 2008, an innings that took 73 balls.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X