For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடிச்சாச்சு லக்கி பிரைஸ்.. மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாபிலிருந்து தலா 3 வீரர்கள்!

சென்னை: ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் 3 பேருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேபோல மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் 3 வீரர்கள் கிடைத்துள்ளனர்.

இது நாள் வரை இந்திய அணியில் கோலோச்சி வந்த சென்னை சூப்பர் கிங்ஸுக்கு செம அடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அணியிலிருந்து மோஹித் சர்மா மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.

அதேசமயம், பிற ஐபிஎல் அணிகளைச் சேர்ந்த வீரர்களுக்கு பரவலாக வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

சென்னைக்கு ஓரிடம் மட்டுமே

சென்னைக்கு ஓரிடம் மட்டுமே

இந்த புதிய அணியை ஒரு பார்வை பார்த்தால்.. அதில் ஒரு முக்கியமான விஷயம் பளிச்சென கண்ணில் படுகிறது. அதாவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்கு மட்டுமே தற்போது இடம் கிடைத்துள்ளது. அவர் மோஹித் சர்மா.

வழக்கமாக நான்கு பேர் மஸ்ட்

வழக்கமாக நான்கு பேர் மஸ்ட்

ரெகுலர் கேப்டன் டோணி, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்கள். இந்த நால்வருமே அனைத்து ஒரு நாள் போட்டிகளிலும் டீபால்ட்டாக இடம் பெற்று வந்தனர்.

அதுதான் பஞ்சாயத்தே

அதுதான் பஞ்சாயத்தே

இது கோஹ்லி தரப்புக்கும், பிறருக்கும் கடும் எரிச்சலைக் கொடுத்து வந்தது. இதை வைத்துத்தான் டோணி, கோஹ்லி இடையே மோதலும் வெடித்ததாக கூறப்படுகிறது.

டோணி தரப்புக்கு குட்டி அடிதான்

டோணி தரப்புக்கு குட்டி அடிதான்

இந்த நிலையில் ஒரே ஒரு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவர்களுக்கு ரெஸ்ட் கொடுத்துள்ளது தேர்வாளர் குழு. அதேசமயம், ரவீந்திர ஜடேஜா அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இது டோணி தரப்புக்கு சின்ன அடிதான்.

பஞ்சாபுக்கு 3 பேர்

பஞ்சாபுக்கு 3 பேர்

இந்திய அணி வீரர்கள் யார் யார் எந்தெந்த ஐபிஎல் அணியைச் சேர்ந்தவர்கள் என்று பார்த்தால், இப்படி வருகிறது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் முரளி விஜய், அக்ஷர் படேல், சந்தீப் சர்மா.

மும்பைக்கும் 3 பேர்

மும்பைக்கும் 3 பேர்

மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது. அந்த அணியிலிருந்து ஹர்பஜன் சிங், அம்பட்டி ராயுடு, தவல் குல்கர்னி.

டெல்லிக்கு 2

டெல்லிக்கு 2

டெல்லி டேர்டெவில்ஸ் அணியிலிருந்து மனோஜ் திவாரி, கேதார் ஜாதவ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்த அணியிலிருந்து 2 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கொல்கத்தாவுக்கும் 2

கொல்கத்தாவுக்கும் 2

கொல்கத்தை நைட் ரைடர்ஸ் அணியிலிருந்தும் 2 பேர் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ராபின் உத்தப்பா, மனீஷ் பாண்டே ஆகியோர்.

ஹைராபாத்துக்கும் 2

ஹைராபாத்துக்கும் 2

அதேபோல சரன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த கரண் சர்மா, புவனேஷ் கு்மார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இதில் கரண் சர்மா சுழற்பந்து வீச்சாளர், புவனேஷ் குமார் வேகப் பந்து வீச்சாளர் ஆவார்.

ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து 2 பேர்

ராஜஸ்தான் ராயல்ஸிலிருந்து 2 பேர்

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து கேப்டன் ரஹானே, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

அய்யோ பாவம் சென்னை

அய்யோ பாவம் சென்னை

இது நாள் வரை இந்திய அணியை ஆட்டிப்படைத்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸிலிருந்து இந்த முறை மோஹித் சர்மா மட்டுமே இடம்பெறுகிறார். மாற்றம் நல்லதுதான்... பார்க்கலாம், பலன் கிடைக்கிறதா என்று!.

Story first published: Monday, June 29, 2015, 14:37 [IST]
Other articles published on Jun 29, 2015
English summary
Players from MI and Kings XI Punjab have got good chance in Team India's Zimbabve tour.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X