For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எந்த பேட்ஸ்மேன் அடித்தால் பொறி கிளம்பி, பூமி அதிரும்? மனம் திறந்த ஆஸி. ஜான்சன்

By Veera Kumar

சிட்னி: தனது பந்து வீச்சு அனுபவத்தில், மிகவும் கடினமான பேட்ஸ்மேன் யார் என்பதை, சமீபத்தில் ஓய்வு பெற்ற, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்சேல் ஜான்சன் வெளிப்படுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான மிட்சேல் ஜான்சன், நியூசிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியோடு சர்வதே கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

73 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள ஜான்சன், 313 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 153 ஒருநாள் போ்டிகளில் ஆடி, 239 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 30 டி20 போட்டிகளிலும் அவர் ஆடியுள்ளார்.

அந்த நபர்

அந்த நபர்

இதனிடையே ஜான்சன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நான் சந்தித்ததில் மிகவும் கடினமான பேட்ஸ்மேன் என்றால் அது தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ்தான்.

அந்த போட்டி

அந்த போட்டி

2012ம் ஆண்டு சென்சூரியன் நகரில் நடந்த போட்டி எனக்கு நினைவுள்ளது. ஆட்டத்தின் தொடக்கத்தில் நான் சில விக்கெட்டுகளை வீழ்த்தி, கம்பீரமாக வலம்வந்தேன். அப்போது களமிறங்கினார் டிவில்லியர்ஸ்.

அசால்ட் அடி

அசால்ட் அடி

மறுமுனையில் எத்தனை விக்கெட் போயுள்ளது, எந்த பவுலர் அந்த விக்கெட்டுகளை வீழ்த்தினார் என்பதெல்லாம் அவர் யோசிக்கவேயில்லை. அவரது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிகவும் அமைதியாகவும், அதேநேரம் ஆக்ரோஷமாகவும் அப்படி அவர் ஆடும்போது பந்து வீசுவது பெரும் சிரமம்.

நான் பார்த்ததில்

நான் பார்த்ததில்

எனது சம காலத்தில் நான் சந்தித்த வீரர்களில் கட்டுப்படுத்த முடியாத வீரர் என்றால் அது டிவில்லியர்ஸ்தான். இவ்வாறு ஜான்சன் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, November 19, 2015, 13:00 [IST]
Other articles published on Nov 19, 2015
English summary
Recently retired Australian fast bowler Mitchell Johnson has revealed who was the toughest batsman to bowl at, during his international career.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X