For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சும்மா சொய்ங்ங்னு போச்சு.. டெஸ்ட் போட்டியில் 160 கி.மீ வேகத்தில் பந்து வீசி ஆஸி. பவுலர் சாதனை

By Veera Kumar

பெர்த்: ஆஸ்திரேலியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது.

அதன், 2வது டெஸ்ட் போட்டி பெர்த் நகரிலுள்ள, வாகா மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில், நேற்று நியூசிலாந்து அணி பேட் செய்தபோது, ஆஸ்திரேலிய பவுலரால் ஒரு சாதனை நிகழ்த்தப்பட்டது.

Mitchell Starc bowls at record 160.4 kmph in Perth Test

ரோஸ் டெய்லர் பேட் செய்தபோது, ஆஸ்திரேலியாவின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் தனது 21வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 4வது பந்து 160.4 கி.மீட்டர் (99.7 மைல்) வேகத்தில் வீசப்பட்டது.

அத்தனை வேகத்தில் யார்க்கர் முறையில் அந்த பந்து வீசப்பட்டாலும், டெய்லர் அவுட் ஆகாமல் அதை தடுத்து விளையாடினார்.

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதுதான் அதிவேகப் பந்து என்று கூறப்படுகிறது.

இதற்கு முன் ஒருநாள் போட்டியொன்றில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் 161.3 கி.மீட்டர் வேகத்தில் வீசியுள்ளார். அதுவே இதுவரை உலக சாதனையாக உள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலியாவின் ஷான் டைட் மற்றும் பிரெட் லீ ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் அதிகபட்சமாக 161.1 கி.மீட்டர் வேகத்தில் பந்து வீசியுள்ளனர்.

Story first published: Monday, November 16, 2015, 11:11 [IST]
Other articles published on Nov 16, 2015
English summary
Australian paceman Mitchell Starc bowled what is believed to be the fastest delivery in Test cricket history Sunday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X