For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அடடா.. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவின் மித்தாலிராஜ் உலக சாதனை!

மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார்.

By Kalai Mathi

பிரிஸ்டோல்: மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் உலக சாதனை படைத்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்களை குவித்தவர் என்ற வரலாற்று சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார்.

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்றைய போட்டியில் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்ட்ஸ் ஒருநாள் போட்டிகளில் அதிகளவாக 5992 ரன்கள் எடுத்து சாதனைப் படைத்திருந்தார். 191 போட்டிகளில் விளையாடி அவர் இந்த சாதனையை படைத்திருந்தார்.

உலகசாதனை படைத்த மித்தாலி

உலகசாதனை படைத்த மித்தாலி

இந்நிலையில் இந்தியாவின் மித்தாலி ராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் சார்லட்டின் சாதனை முறியடித்துள்ளார். அதோடு ஒரு நாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்த வீராங்கனை என்ற புதிய உலக சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

அதிக அரைச்சதங்கள்

அதிக அரைச்சதங்கள்

முன்னதாக தொடர்ந்து 7 முறை அரைச்சதங்களை கடந்தவர் என்ற சாதனையை படைத்திருந்தார் மித்தாலி. மேலும் அதிக அரைச்சதங்களை குவித்தவர் என்ற பெருமைக்கும் மித்தாலி ராஜ் சொந்தக்காரர் ஆவர்.

பெண் சச்சின் டெண்டுல்கர்

பெண் சச்சின் டெண்டுல்கர்

34 வயதான மித்தாலி ராஜ் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கர் என்ற அழைக்கப்படுகிறார். ஐசிசிக உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக பிரஸ் மீட் ஒன்றில் செய்தியாளர் ஒருவர் உங்களுக்கு பிடித்த ஆண் கிரிக்கெட் வீரர் யார் என்று கேள்வி எழுப்பினார்.

செய்தியாளரை மிரள வைத்த மித்தாலி

செய்தியாளரை மிரள வைத்த மித்தாலி

அதற்கு தடாலடியாக பதிலளித்த மித்தாலி இதே கேள்வியை ஆண் கிரிக்கெட் வீரர்களிடம் கேட்பீர்களா என்றார். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின் போது மிடில் ஆர்டரில் இறங்குவதற்கு முன்பாக அவர் புத்தகம் படித்துக்கொண்டிருந்தார். இதனால் தலைப்புச்செய்தியில் இடம்பெற்றார். அவரது இந்த நடவடிக்கை சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, July 12, 2017, 17:54 [IST]
Other articles published on Jul 12, 2017
English summary
India captain Mithali Raj created history on Wednesday when she became the leading run-scorer in women's One Day International cricket. She achieved the feat against Australia in the ICC Women's World Cup 2017 match at Bristol. Mithali became the first ever woman cricketer to touch the 6,000 ODI runs mark.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X