மனைவி, மகள் கண்ணெதிரே கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது தாக்குதல்! 3 இளைஞர்கள் கைது

Posted By:
Subscribe to Oneindia Tamil

கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் முகமது ஷமி இளைஞர்கள் சிலரால் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் முகமது ஷமி. சமீபத்தில் நிறைவடைந்த மே.இ.தீவுகளுக்கு எதிரான சுற்றுப் பயணத்தில் இந்திய அணியில் இடம் பிடித்தவர்.

இந்திய அணியின் இலங்கை சுற்றுப் பயணத்திலும் ஷமி இடம் பிடித்துள்ளார்.

வீட்டு முன்பு கார்

வீட்டு முன்பு கார்

இந்த நிலையில் இரு தினங்கள் முன்பு மனைவி, தனது மகளுடன் பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில் வீடு திரும்பினார். வீடு அமைந்துள்ள கட்டிடத்தின் முன்பாக காரை நிறுத்தியுள்ளார் டிரைவர். கட்டிட கேட்டை திறக்க ஊழியர் வந்துள்ளார்.

குடிபோதை

குடிபோதை

இந்த நிலையில், ஷமி காருக்கு பின்னால் மற்றொரு வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள், வெகுநேரமாக கார் அங்கேயே நிற்பதால் தங்களால் நகர முடியவில்லை என கூறி ஷமி கார் டிரைவரிடம் தகராறு செய்துள்ளனர். அந்த இளைஞர்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது.

ஷமி மீது தாக்குதல்

ஷமி மீது தாக்குதல்

இதையடுத்து ஷமி காரிலிருந்து இறங்கி, அவர்களை விலகிப்போகச்சொன்னார். ஆனால் அந்த இளைஞர்கள் ஷமியை தாக்கியுள்ளனர். தடுக்க முயன்ற டிரைவரையும், கட்டிட ஊழியரையும் கூட அவர்கள் தாக்கியுள்ளனர். மனைவி, மகள் கண் எதிரிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

போலீஸ் நடவடிக்கை

போலீஸ் நடவடிக்கை

இதையடுத்து அதிர்ச்சியடைந்த முகமது ஷமி, ஏரியாவிலுள்ள போலீஸ் நிலையத்தில் புகார் பதிவு செய்தார். இதையடுத்து போலீசார், அந்த வாலிபர்கள் மூவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Women Cricket Squad Captain Mithali raj biography-Oneindia Tamil

மனத்திற்குப் பிடித்த வரன்கள் உங்கள் தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்!

English summary
In a shocking incident, three youngsters allegedly attacked cricketer Mohammed Shami outside his home in Kolkata on Saturday night.
Please Wait while comments are loading...