For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கட்டாக்கில் நடந்த ரசிகர்களின் "பாட்டில் அட்டாக்"... ஜாலியா எடுத்துக்கனும்... சொல்கிறார் டோணி

கட்டாக்: கட்டாக் போட்டியின்போது ரசிகர்கள் தண்ணீர் பாட்டில்களை வீசியது ஜாலியான விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேப்டன் டோணி கூறியுள்ளார்.

இதெல்லாம் சீரியஸான விஷயம் இல்லை. ஜாலியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால் இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் கவாஸ்கரைப் போல இல்லாமல், ரசிகர்களுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார் டோணி என்பது முக்கியமானது.

இதுகுறித்து டோணி கூறியுள்ளதாவது...

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

இதுக்குப் போயி அலட்டிக்கலாமா

இதையெல்லாம் சீரியஸாகவே எடுத்துக் கொள்ளக் கூடாது. ரசிகர்கள் ஜாலியாக செய்த விஷயம் இது. இதை பெரிதுபடுத்தத் தேவையில்லை.

அப்படித்தான் விசாகப்பட்டனத்தில் அன்று..

அப்படித்தான் விசாகப்பட்டனத்தில் அன்று..

ஒருமுறை நாங்கள் விசாகப்பட்டனத்தில் விளையாடியபோது, நாங்கள் போட்டியை எளிதாக வென்று விட்டோம். அப்போதும் ரசிகர்கள் பாட்டில்களைத் தூக்கி வீசினர். பார்வையாளர்களின் உற்சாக வெளிப்பாடாக இதை பார்க்க வேண்டும்.

ஆனால் பாதுகாப்பு

ஆனால் பாதுகாப்பு "மஸ்ட்" பாஸ்!

இருப்பினும் வீரர்களின் பாதுகாப்பு என்பது முக்கியமானது, அதில் சமரசம் செய்ய முடியாது. அந்த நோக்கி் பார்த்தாலும் கூட இந்த சம்பவத்தால் வீரர்களின் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்பட்டதாக நான் கருதவில்லை.

முதலில் கோபம்.. அப்புறம் ஜாலி!

முதலில் கோபம்.. அப்புறம் ஜாலி!

நாங்கள் சரியாக விளையாடவில்லை. அப்படிப்பட்ட சமயத்தில் இப்படிப்பட்ட ரியாக்ஷனை எதிர்பார்த்துத்தான் ஆக வேண்டும். முதலில் வந்து விழுந்த பாட்டில்கள்தான் கோபத்தில் வந்தவை. மற்றவை ஜாலியாக வந்தவை என்றார் டோணி.

டூப்ளஸிஸ் கண்டனம்

டூப்ளஸிஸ் கண்டனம்

இருப்பினும் தென் ஆப்பிரிக்க டுவென்டி 20 கேப்டன் டூப்ளஸிஸ் இந்த செயலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு மீண்டும் தொடரக் கூடாது என்று விரும்புகிறோம். தொடராது என்று நம்புகிறோம். 72 நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளோம். இதுபோன்ற செயல் நல்லதல்ல.

இப்படி பார்த்ததே இல்லையே

இப்படி பார்த்ததே இல்லையே

நான் 5 முதல் 6 ஆண்டு காலம் இந்தியாவில் விளையாடியுள்ளேன். இந்தியா எனக்குப் புதிதில்லை. ஆனால் இப்படிப்பட்ட செயலை நான் பார்த்ததே இல்லை. இங்கு நாம் போட்டியிடவே வந்துள்ளோம். சிறந்த அணி வெல்லும். இதை விளையாட்டாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றார் அவர்.

Story first published: Tuesday, October 6, 2015, 12:36 [IST]
Other articles published on Oct 6, 2015
English summary
India's limited overs skipper MS Dhoni sought to down play the boorish crowd behaviour, where he termed throwing of bottles as "not so serious" and "done just for fun", even though legendary Sunil Gavaskar blasted the authorities demanding strict punishment.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X