அய்யோடா.. 6 டெஸ்ட்டில் மட்டுமே விளையாடிவர் இந்திய அணியின் தேர்வுக் குழு தலைவராம்!

By:

டெல்லி: வெறும் 6 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே விளையாடிய ஒருவரை இந்திய சீனியர் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக பிசிசிஐ தேர்வு செய்துள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் பிசிசியின் இந்தத் தேர்வு ரொம்பக் கேவலமாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய அணியின் தேர்ழுக் குழுத் தலைவராக சந்தீப் பாட்டீல் இருந்து வந்தார். இவரது குழுவின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து புதிய அணியை அறிவித்துள்ளது கிரிக்கெட் வாரியம்.

புதிய தேர்வுக் குழுவின் தலைவராக முன்னாள் விக்கெட் கீப்பர் எம்எஸ்கே பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். அறிவிப்பெல்லாம் ஓகே. ஆனால் அறிவிக்கப்பட்ட பிரசாத் குறித்துத்தான் இப்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

விரல் விட்டும் எண்ணும் அளவு

பிரசாத்தின் கிரிக்கெட் வரலாற்றைப் பார்த்தால் அய்யோடா என்று சொல்வீர்கள். காரணம் அந்த அளவுக்கு அனுபவம் இல்லாத ஒரு வீரராக இருந்திருக்கிறார் பிரசாத். நிறைய பேருக்கு இவரை யாரென்றே கூட தெரியாது.

6 போட்டியில் மட்டுமே

பிரசாத் வெறும் 6 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். ஒரு நாள் போட்டிகள் என்று பார்த்தால் 17 போட்டிகள்தான். இவரது காலத்தில் டுவென்டி 20 போட்டி வரவே இல்லை.

ரன்கள்

மொத்தமே இரு வகைப் போட்டிகளிலும் அவர் 237 ரன்கள்தான் எடுத்துள்ளார். அதில் டெஸ்ட்டில் 106 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 131 ரன்களும் எடுத்துள்ளார். அவ்வளவுதான்.

ஒரே ஒரு அரை சதம்தான்

இவர் டெஸ்ட்டில் சதமோ, அரை சதமோ போட்டதில்லை. ஒரு நாள் போட்டியில் ஒரே ஒரு அரை சதம் மட்டுமே போட்டுள்ளார். பெரிய விளையாட்டுக்காரர் இல்லை என்பது இவரது பேட்டிங் சராசரியே சொல்லும். டெஸ்ட்டில் 11.77, ஒரு நாள் போட்டியில் 14.55 என்பதே இவரது சராசரியாகும்.

டெஸ்ட்டில் அதிகபட்சம் 19

டெஸ்ட் போட்டியில் இவரது தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோரே 19 ரன்கள்தான். ஒரு நாள் போட்டியில் அதிகபட்சம் 63 ரன்களாகும். இதற்கு மேல் இவர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

விக்கெட் கீப்பிங் அதற்கும் மேலே!

சரி விக்கெட் கீப்பராச்சே கலக்கியிருப்பார் என்று பார்த்தால் அது அதற்கும் மேல் உள்ளது. டெஸ்ட் போட்டியில் 15 கேட்ச் பிடித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 14 கேட்ச் பிடித்துள்ளார்.

டெஸ்ட்டில் ஒரு ஸ்டம்பிங் கூட கிடையாது

டெஸ்ட் போட்டிகளில் இவர் ஒருவரைக் கூட ஸ்டம்பிங் செய்ததே கிடையாது. ஒரு நாள் போட்டிகளில் 7 பேரை ஸ்டம்பிங் முறையில் அவுட்டாக்கியுள்ளார். இப்படிப்பட்டவரை கிரிக்கெட் தேர்வுக் குழுத் தலைவராக அறிவித்துள்ளது கிரிக்கெட் வாரியம். இது பலத்த சரச்சைகளைக் கிளப்பியுள்ளது.

English summary
Less experienced former Test player MSK Prasad has been appointed as the chief of the Selectors. He has splayed only 6 tests ad 17 ODIs it is noted.
Please Wait while comments are loading...

Videos