For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல்.. 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்

By Veera Kumar

மும்பை: இன்று இரவு நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி டேர்டெவில்ஸ் மோதின. டாசில் வென்ற டெல்லி பவுலிங்கை தேர்ந்தெடுத்தது.
டெல்லியின் சிறப்பான பந்து வீச்சால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணியால் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 142 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

அந்த அமியின் ஜோஸ் பட்லர் 28, பொலார்ட் 26, ஹர்திக் பாண்ட்யா 24 ரன்கள் எடுத்தனர். டெல்லி சார்பில் அமித் மிஸ்ரா மற்றும் பேட் கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டுகளையும், ரபடா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Mumbai Indians beat Delhi Daredevils by 14 runs

தொடர்ந்து ஆடிய டெல்லி அணியும் தொடக்கத்திலேயே சரிவை சந்தித்தது. சஞ்சு சாம்சன், 9, கருண் நாயர் 5, ஷ்ரேயாஸ் ஐயர் 6 ரன்களில் வெளியேற, ஆதித்யதாரே, கோரி ஆன்டர்சன், ரிஷப் பந்த் ஆகியோர் டக்அவுட்டாகி அதிர்ச்சியளித்தனர்.

இருப்பினும், பவுலரான ரபடா திடீரென பேட்டிங்கில் பின்னியெடுத்து 39 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து நம்பிக்கை கொடுத்தார். கிறிஸ் மோரீஸ் மும்பையை அச்சுறுத்தும் வகையில் ஆடினார். இருப்பினும் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அந்த அணியால் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. மோரீஸ் 52 ரன்களுடன் களத்தில் நின்றார்.

முதல் 6 ஓவர்களுக்குள் எதிரணியின் 4 விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், அதன்பிறகு மும்பை அணியை வெல்லவே முடியாது என்ற சாதனை வரலாறு, இன்றைய போட்டியிலும் தொடர்ந்தது.

Story first published: Saturday, April 22, 2017, 23:56 [IST]
Other articles published on Apr 22, 2017
English summary
Morris and Rabada gave them an almighty scare, but Mumbai hold on for the win in a low-scoring IPL match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X