For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாருங்க துரோகி? இலங்கை கிரிக்கெட் வாரியம் மீது முத்தையா முரளிதரன் படு பயங்கர பாய்ச்சல்!

By Mathi

கொழும்பு: ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு 10 நாட்கள் பயிற்சி அளிக்க முத்தையா முரளிதரன் ஒப்புக் கொண்டதை இலங்கை கிரிக்கெட் வாரியம் மிகக் கடுமையாக விமர்சித்து வருகிறது. இதற்கு முரளிதரனும் மிக காட்டமான பதிலடி தந்து வருகிறார்.

ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளது. இப்பயணத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு 10 நாட்கள் பயிற்சி கொடுக்க முரளிதரன் ஒப்புதல் தெரிவித்திருந்தார்.

ஆனால் பல்வேறு பஞ்சாயத்துகளை முன்வைத்து தற்போது இலங்கை கிரிக்கெட் வாரியம் முரளிதரனை விமர்சித்து வருகிறது. இதனால் முரளிதரன் கொந்தளித்து போயுள்ளார்.

அறம்னு ஒன்னு இருக்கே...

அறம்னு ஒன்னு இருக்கே...

இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் திலங்க சுமதிபலா கூறுகையில், நாங்கள் கடுமையாக ஏமாற்றமடைந்துள்ளோம். முரளிதரனை காப்பாற்றுவதற்காக வாரியம் நிறைய செலவு செய்துள்ளது. அவரை நாங்கள் மூன்று முறை காப்பாற்றியுள்ளோம். இதற்கு நிறைய வாரியம் செலவு செய்துள்ளது. தொழில்பூர்வமாக அவர் ஆஸ்திரேலியாவுக்கு ஆலோசனை வழங்குவது பற்றி ஒன்றுமில்லை, ஆனால் விஷயம் அறம் சம்பந்தப்பட்டதாகும் என்றார்.

முரளி பதில்

முரளி பதில்

இதற்கு முரளிதரன் அளித்த பதில்: இலங்கை மக்கள் எனக்காக நிறைய செய்துள்ளனர், நானும் அவர்களுக்கு முடிந்ததைச் செய்துள்ளதாகவே கருதுகிறேன். நான் என் நண்பரின் உதவியுடன் குட்னெஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையைத் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும், சுமார் 50,000 குடும்பங்களுக்கு உதவி புரிந்துள்ளோம்.

30-40 பிட்சுகள்

30-40 பிட்சுகள்

சுனாமிக்குப் பிறகு ஆயிரம் வீடுகள் கட்டிக் கொடுத்துள்ளோம். கிரிக்கெட்டைப் பொறுத்தவரையில் வடக்கு கிழக்கு மாகாணங்களில் 30-40 பிட்ச்களை அமைத்துள்ளோம். இலங்கை கிரிக்கெட் வாரியம் செய்ததை விட நாங்கள் எங்கள் நிதியிலிருந்து அதிகமாகவே செய்துள்ளோம்.

வெளிநாட்டில் கோச்சுகளாக..

வெளிநாட்டில் கோச்சுகளாக..

நம் வீரர்கள் அருமையான கோச்சாக முதிர்ச்சி பெற்றிருக்கும் போது, வாரியம் அவர்களை துரத்தி அடித்துள்ளது. ஹதுரசிங்க, சமிந்தா வாஸ், மர்வன் அட்டப்பட்டு, மரியோ வில்லவராயன், திலன் சமரவீர ஆகியோர் பயிற்சியாளர்களாகி விட்டனர், சமரவீர ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளார். இவர்கள் பல்வேறு நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்,

யார் துரோகிப்பா?

யார் துரோகிப்பா?

நான் துரோகியா இல்லை அவர்கள் துரோகியா? சம்பளமும் கூட அயல்நாட்டு பயிற்சியாளர்களுக்கு அதிகம் வழங்குகின்றனர். நம்மூர் பயிற்சியாளர்களுக்கு குறைவாக வழங்குகின்றனர்.

இவ்வாறு கொந்தளித்து பேசியிருக்கிறார் முரளிதரன்.

Story first published: Tuesday, July 26, 2016, 20:20 [IST]
Other articles published on Jul 26, 2016
English summary
Sri Lanka's Muttiah Muralitharan has defended his right to coach Australia's bowlers during a Test series.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X