For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மோடியே என்னைப் பாராட்டிட்டாரே.. அப்படியே ஜிவ்வென்று பறக்கும் முரளிதரன்

பிரதமர் நரேந்திர மோடி கொழும்பில் கலந்து கொண்ட விழாவில் தன்னை புகழ்ந்தது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக முத்தையா முரளிதரன் கூறியுள்ளார்.

By Lakshmi Priya

கொழும்பு: கொழும்பில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி தன் பெயரை உச்சரித்து பாராட்டியது இன்ப அதிர்ச்சியாக உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

உலகம் முழுவதும் வாழும் புத்த மதத்தினர் அவரது பிறந்த நாளை கடந்த 10-ஆம் தேதி விழாவாக கொண்டாடினர். இதையொட்டி ஐ.நா. சபை சார்பில் இலங்கை தலைநகர் கொழும்பில் சர்வதேச மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு சென்றார்.

அங்கு 14-வது சர்வதேச வெசாக் மாநாடு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கி பேசினார்.

சிறந்த பந்துவீச்சாளர்

சிறந்த பந்துவீச்சாளர்

அப்போது அவர் பேசுகையில் மலையக மக்கள் அளித்த சிறந்த இரு பரிசுகள் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இலங்கை மண்ணைச் சேர்ந்தவர். மற்றொருவர் உலகில் இதுவரை உருவாகிய மிக சிறந்த பந்து வீச்சாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரன் என்றார்.

முரளிதரன் ஹேப்பி

முரளிதரன் ஹேப்பி

இதுகுறித்து முத்தையா முரளிதரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அர் கூறுகையில், இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாகும். என்னுடைய நாட்டில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியில் எனது பெயரை இந்திய பிரதமர் குறிப்பிட்டு பாராட்டு தெரிவித்திருப்பது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்தியாவுடன் நெருக்கம்

இந்தியாவுடன் நெருக்கம்

நான் தென்னிந்திய பெண்ணை மணந்துள்ளதால் எனக்கும், இந்தியாவுக்கு மிகப்பெரிய நெருக்கம் உள்ளது. என்னுடைய மூதாதையர்கள் இந்தியாவை சேர்ந்தவர்களாவர். நாங்கள் 4 அல்லது 5-ஆவது தலைமுறையினர் ஆவர். இலங்கையின் மூத்த சகோதரராக இந்தியா எப்போதும் விளங்கும் என்று நான் நம்புகிறேன். அந்த நட்புறவு வருங்காலங்களில் மென்மேலும் வளர வேண்டும். எங்களுக்கு இந்தியா பல்வேறு வழிகளில் உதவியுள்ளது என்றார் அவர்.

சென்னையின் மருமகன்

சென்னையின் மருமகன்

இலங்கையில் உள்ள கண்டியில் தமிழ் குடும்பத்தில் கடந்த 1972-ஆம் ஆண்டு பிறந்தார் முரளிதரன். கடந்த 2005-இல் சென்னை மலர் மருத்துவமனை உரிமையாளரின் மகள் மதிமலர் ராமமூர்த்தியை மணந்து கொண்டார். பிரபல கிரிக்கெட் வீரரான முரளிதரன் மிகச் சிறந்த சுழற் பந்து வீச்சாளர். டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை குவித்த வீரர் என்ற பெருமை பெற்ற முரளிதரன், 133 டெஸ்ட் போட்டிகளில் 800 விக்கெட்டுகளையும் 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று 544 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Story first published: Sunday, May 14, 2017, 14:47 [IST]
Other articles published on May 14, 2017
English summary
Muthiah Muralidharan was surprised when Prime Minister Narendra Modi mentioned him while praising the contribution of Indian origin Tamil community in Sri Lanka, and feels that it is a great honour for him
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X