For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"கிரில்"லைத் தாண்டி வந்து தாக்கிய பந்து... நியூசி. வீரரின் கண்ணில் செம அடி.. ஆபரேஷன்!

வெலிங்டன்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின்போது பாகிஸ்தான் வீரர் அன்வர் அலி வீசிய பந்து படு வேகமாக வந்து ஹெல்மெட்டின் கம்பிகளையும் தாண்டி ஊடுறுவி கண்ணில் பட்டதால் நியூசிலாந்து வீரர் மிட்சல் மெக்ளெனகனின் கண்ணில் காயம் ஏற்பட்டு விட்டது. இதையடுத்து அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் அணி நியூசிலாந்து சென்றுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையிலான ஒரு நாள் போட்டித் தொடர் தொடங்கியுள்ளது. இன்று வெலிங்டன் நகரில் முதல் ஒரு நாள் போட்டி நடந்தது.

படு வேகப் பந்து வீச்சு

படு வேகப் பந்து வீச்சு

இப்போட்டியில் இன்று நியூசிலாந்து அணி பேட் செய்து கொண்டிருந்தபோது அன்வர் அலியால் பிரச்சினை ஏற்பட்டு விட்டது. அவர் வீசிய புயல் வேகப் பந்து தாக்கி மிட்சல் காயமைடந்து விட்டார்.

ஹெல்மெட்டைத் தாண்டி வந்து

ஹெல்மெட்டைத் தாண்டி வந்து

அன்வர் அலி வீசிய பந்து படு வேகமாக வந்து மிட்சலின் முகத்தைத் தாக்கியது. அவரது ஹெல்மெட் கம்பிகளையும் ஊடுறுவி உள்ளே புகுந்த கண்ணைத் தாக்கி விட்டது.

ரத்தம் கொட்டியது

ரத்தம் கொட்டியது

பந்து வேகமாகத் தாக்கியதால் நிலை குலைந்து போன மிட்சல் அப்படியே மைதானத்தில் அமர்ந்து விட்டார். அவரது கண்ணிலிருந்து ரத்தம் கொட்டியது. பின்னர் அவரை வேகமாக அங்கிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆபரேஷன்

ஆபரேஷன்

அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை நடந்தது. அவரது கண்ணுக்கு அருகே சில எலும்புகள் முறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் தற்போது ஓய்வெடுத்து வருவதாக பின்னர் மிட்சல் டிவிட் செய்தார்.

ஆக்லாந்தில் ஆபரேஷன்

ஆக்லாந்தில் ஆபரேஷன்

மேல் சிகிச்சைக்காக ஆக்லாந்து செல்கிறார் மிட்சல். அங்கு அவருக்கு வெள்ளிக்கிழமை இன்னொரு ஆபரேஷன் நடைபெறவுள்ளதாக நியூசிலாந்து அணியின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தான் தோல்வி

முன்னதாக இப்போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 280 ரன்கள் எடுத்தது. மிட்சல் காயமடைந்த போது 31 ரன்களுடன் இருந்தார். பின்னர் ஆடிய பாகி்ஸ்தான் 210 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அடுத்த போட்டி நேப்பியரில் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.

Story first published: Monday, January 25, 2016, 16:50 [IST]
Other articles published on Jan 25, 2016
English summary
New Zealand's Mitchell McClenaghan is to undergo surgery for a fractured eye socket after suffering a nasty blow to the face in today's one-day international victory against Pakistan.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X