For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

உலகக் கோப்பை கிரிக்கெட்: 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானை வீழ்த்தியது நியூசிலாந்து!

By Mathi

நேப்பியர்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது நியூசிலாந்து.

உலக கோப்பை போட்டியில் இன்றைய 31வது லீக் ஆட்டம் நியூசிலாந்தில் உள்ள நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஏ பிரிவில் உள்ள நியூசிலாந்தும், ஆப்கானிஸ்தானும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த தீர்மானித்தது.

New Zealand beats Afghanistan by 6 wickets

இதுவரை நடந்த ஆட்டத்தில் நியூசிலாந்து 4 ஆட்டத்திலும் வென்று கால் இறுதியில் நுழைந்து இருக்கிறது. இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளை வீழ்த்தி இருந்தது.

ஆப்கானிஸ்தான் 4 ஆட்டத்தில் விளையாடி ஒன்றில் மட்டும் வென்றது. பரபரப்பான போட்டியில் ஸ்காட்லாந்தை 1 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 3 போட்டியில் தோற்றது. வங்காளதேசம், இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளிடம் ஆப்கன் தோற்றுப்போனது.

இன்றைய ஆட்டத்தில் ஆப்கான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாவித் அகமதி, உஸ்மான் கானி ஆகியோர் களமிறங்கினர். வந்த வேகத்தில் ஆட்டத்தின் 1.3வது ஓவரில் 7 பந்துகளை சந்தித்து 1 ரன்கள் மட்டுமே எடுத்த போது பவுல்ட் வீசிய பந்தில் ஜாவேத் எல்.பி.டபிள்யு ஆனார்.

அடுத்ததாக உஸ்மான் கானி ரன் எதுவும் எடுக்காத நிலையில் வெட்டோரி வீசிய பந்தில் அவுட்டாகி வாத்து நடை நடந்தார். அடுத்து களம் இறங்கிய மங்கல் தனது நிதானமான ஆட்டத்தின் மூலம் அணியின் ரன்களை லாவகமாக உயர்த்தினார். இருந்தபோதிலும் வெட்டோரியின் பந்து வீச்சில் அவர் 27 ரன்கள் மட்டுமே எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

தொடர்ந்து ஆப்கான் அணியின் வீரர்கள் நியூசிலாந்தின் பந்தை எதிர் கொள்ள முடியாமல் மளமளவென விக்கெட்களை இழந்தனர்.

இருந்த போதிலும் அணியின் ஷென்வாரி தனது அணியின் ரன்களை உயர்த்த பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி 54 ரன்கள் எடுத்து அணிக்கு பலம் சேர்த்தார். அணியின் கேப்டன் முகமது நபி 1 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

அடுத்ததாக களம் இறங்கிய நஜிபுல்லா தனது அதிரடி ஆட்டத்தின் திறமையால் அணியின் ரன்களை உயர்துவதற்கு கடுமையாக போராடினார். அவர் 56 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்த போது மில்னே பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.

தொடர்ந்து வந்த வீரர்கள் பெரிதாக சோபிக்காத நிலையில் 47.4வது ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து ஆப்கானிஸ்தான் 186 ரன்கள் மட்டுமே எடுத்தது. நியூசிலாந்து அணி வீரர் வெட்டோரி 4 விக்கெட்டுகளையும், பவுல்ட் 3 விக்கெட்டுகளையும், ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும், மில்னே 1 விக்கெட்டையும் எடுத்தனர்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து தனது ஆட்டத்தை தொடங்கியது. நியூசிலாந்து வீரர்கள் தொடக்கம் முதலே சீரான ரன்குவிப்பில் ஈடுபட்டனர்.

அந்த அணி 5.5 ஓவர்களில் 53 ரன்களை எடுத்திருந்த நிலையில் மெக்கல்லம் அவுட் ஆனார். அவர் 19 பந்துகளில் 42 ரன்களைக் குவித்தார். களத்தில் இருந்த கப்தில்லுடன் கை கோர்த்த வில்லியம்சன் நிலைத்து நின்று ரன்களைக் குவிப்பதில் தீவிரம்காட்டினர்.

வில்லியம்சன் 45 பந்துகளில் 33 ரன்களையும் குப்தில் 76 பந்துகளில் 57 ரன்களையும் குவித்து அவுட் ஆகினர். எல்லியட் 28 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். 36.1வது ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது நியூசிலாந்து.

Story first published: Sunday, March 8, 2015, 11:12 [IST]
Other articles published on Mar 8, 2015
English summary
New Zealand made it five wins from five at the World Cup as a six-wicket win in Napier eliminated Afghanistan from quarter-final contention.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X