For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஓவர்களை 40-ஆக குறைக்க ஐசிசி திட்டம்! அடுத்த உலக கோப்பையில் அமல்?

By Veera Kumar

லண்டன்: அடுத்த உலக கோப்பை போட்டியை 40 ஓவர்கள் கொண்டதாக மாற்ற ஐசிசி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 1975ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது ஒருநாள் போட்டிகளுக்கு மொத்தம் 60 ஓவர்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து 1979 மற்றும் 1983ம் ஆண்டுகளில் உலக கோப்பை போட்டிகள் 60 ஓவர்களாகவே நடத்தப்பட்டன.

முதல் முறை

முதல் முறை

1987ம் ஆண்டுதான் உலக கோப்பையில் முதல்முறையாக 50 ஓவர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு நடப்பு உலக கோப்பை வரையிலும் 50 ஓவர்களே நடைமுறையில் உள்ளது.

டி20 பிரபலம்

டி20 பிரபலம்

தற்போது டி20 கிரிக்கெட் போட்டிகள் பிரபலமடைந்துள்ளன. 20 ஓவர்களில் போட்டிகள் முடிவடைவதை பார்த்து ரசித்த ரசிகர்களுக்கு 50 ஓவர்கள் முடியும்வரை மைதானத்திலோ, டிவி பெட்டிகளின் முன்போ உட்கார்ந்திருக்க பொறுமை இல்லை.

அடுத்த உலக கோப்பை

அடுத்த உலக கோப்பை

எனவே, அடுத்த உலக கோப்பையில் இருந்து மொத்த ஓவர்களை 40ஆக குறைக்க ஐசிசி திட்டமிட்டுள்ளது.

40-40

40-40

ஐசிசிக்கு இந்த பரிந்துரையை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அளித்துள்ளது. இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பலம் பொருந்திய நாடுகள் நெருக்கடி கொடுத்தால் அடுத்த ஆண்டு உலக கோப்பையை 40-40 போட்டியாக கண்டு ரசிக்கலாம்.

Story first published: Thursday, February 26, 2015, 13:59 [IST]
Other articles published on Feb 26, 2015
English summary
The one-day matches in the next edition of the ICC World Cup could be 40-overs-a-side affairs and Test matches reduced to four days if the discussions between the chairmen of English counties and the ECB are proposed and ultimately accepted by the the ICC.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X