For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐபிஎல் பைனலில் அரங்கேறியதா பிக்சிங்? டெல்லியில் சூதாட்ட தரகர்கள் 9 பேர் கைது

By Veera Kumar

டெல்லி: ஐபிஎல் பைனலில் நேற்று மும்பை இந்தியன்ஸ்-புனே அணிகள் மோதின. இதில் மும்பை அணி 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில், இப்போட்டி முடிவை வைத்து சூதாட்டம் ஆடிய 9 பேர் டெல்லியிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து செல்போன், லேப்டாப் முதலிய உபகரணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்கள் போட்டியின் வெற்றி தோல்வியை ஆன்லைன் மூலம் கணித்ததாக கூறப்படுகிறது.

போட்டி முடிவை மாற்றினார்களா?

போட்டி முடிவை மாற்றினார்களா?

இவர் போட்டி முடிவை கணித்தனரா, அல்லது போட்டி முடிவை மாற்றும் வகையில் சூதாட்டத்தில் ஈடுபட்டனரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 130 ரன்கள் என்ற இலக்கை துரத்த முடியாமல் புனே தோற்றது ஏன் என்பது குறித்த சர்ச்சை நடக்கும் நிலையில் சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சந்தேகம்

சந்தேகம்

மேலும் கடைசி ஓவர் வரை போட்டியை இழுத்தடித்து வெறும் 1 ரன்னில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்டதில் சூதாட்டம் நடந்திருக்கலாம் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில், சூதாட்ட தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே புகார்

ஏற்கனவே புகார்

சூதாட்ட புகார் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் கடந்த மற்றும் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஆட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு திரும்புகின்றன

அடுத்த ஆண்டு திரும்புகின்றன

இவ்விரு அணிகளும் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் களமிறங்க உள்ளன. எனவே இவ்விரு ஆண்டுகளும் ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்ட குஜராத் மற்றும் புனே அணிகள் அடுத்த ஆண்டுமுதல் விளையாடப்போவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, May 22, 2017, 14:36 [IST]
Other articles published on May 22, 2017
English summary
Nine arrested in online IPL betting case in Delhi. Arrests made by Delhi Police Crime Branch from a 5-star hotel.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X