For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதான் கோஹ்லி இருக்காரே.. இந்தியாவுக்கு எதுக்கு வெட்டியா பயிற்சியாளர்?: விளாசும் மாஜி வீரர்

By Veera Kumar

கொல்கத்தா: விராட் கோஹ்லி தன்னை பாஸ் என நினைத்துக்கொண்டால் இந்திய அணி பயிற்சியாளர் இல்லாமலேயே விளையாடலாமே என்று இந்திய அணியின் முன்னாள், முன்னணி, சுழற்பந்து வீச்சாளர் எரப்பள்ளி பிரசன்னா கடுமையாக சாடியுள்ளார்.

கும்ப்ளே மீது கேப்டன் கோஹ்லி கோபத்தில் இருந்ததுதான், தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து கும்ப்ளே ராஜினாமா செய்ய காரணம் என்பது பகிரங்கமாகிவிட்டது.

இதுகுறித்து எரப்பள்ளி பிரசன்னா கூறியது: கேப்டன்தான் பாஸ் என்றால் அவர்களுக்கு எதற்கு பயிற்சியாளர்? இவர்களுக்கு பேட்டிங் அல்லது ஃபீல்டிங் பயிற்சியாளர் கூட தேவையில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

நல்ல கேப்டன் இல்லை

நல்ல கேப்டன் இல்லை

கோஹ்லி ஒரு சிறந்த விளையாட்டு வீரர் என்பதில் மாற்று கருத்தே கிடையாது. ஆனால் அவர் ஒரு நல்ல கேப்டனா இல்லையா என்பதை பற்றி எனக்கு புரியவில்லை.

கும்ப்ளேவுக்கு இந்த நிலை

கும்ப்ளேவுக்கு இந்த நிலை

நாட்டின் ஜாம்பவான் வீரராக இருந்த அனில் கும்ப்ளே மதிக்கப்படவில்லை என்றால், பேட்டிங் பயிற்சியாளரான சஞ்சய் பங்கரும், ஃபீல்டிங் பயிற்சியாளரான ஸ்ரீதரும், கோஹ்லியிடம் தைரியமாக பேச முடியாது என்றுதான் நான் கருதுகிறேன்.

உடற்பயிற்சிக்கு போதும்

உடற்பயிற்சிக்கு போதும்

உடற்பயிற்சிக்கு யாரையாவது நியமித்துக்கொள்ளட்டும். அது மட்டும் இந்த அணிக்கு போதும் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு கேப்டன் நடந்து கொள்ளும்போது அவர்களுக்கு பயிற்சியாளரே தேவையில்லை என்றுதான் நினைக்கிறேன்.

மேனேஜர் போடலாம்

மேனேஜர் போடலாம்

கோஹ்லியே எல்லாவற்றையும் செய்துவிடுவார் என்று கருதினால், நாம் பழைய காலங்களை போல அணிக்கு ஒரு மேனேஜரை மட்டும் நியமித்துவிடலாம். பயிற்சியாளர் எதற்கு தேவையில்லாமல் இருக்க வேண்டும்.

இளம் வீரர்கள் தேவை

இளம் வீரர்கள் தேவை

டோணியும், யுவராஜ்சிங்கும், 2019 உலக கோப்பை வரை அணியில் இருப்பார்கள் என நான் கருதவில்லை. அதற்குள்ளாக அவர்களுக்கு 38 வயதாகிவிடும். இந்திய அணிக்கு இளமையான, துடிப்பான வீரர்கள் தற்போதைய தேவை. பலவீனமான அணியான மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான சுற்றுப் பயணத்திற்கு இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை தேர்வாளர்கள் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Story first published: Saturday, June 24, 2017, 11:02 [IST]
Other articles published on Jun 24, 2017
English summary
Former India off-spinner Erapalli Prasanna today took a dig at Virat Kohli and said if the current skipper feels he is the "boss" of the Indian cricket then the team can do without a coach.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X