For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இத்தனை அடிக்கு பிறகும் கூகுளில் பாகிஸ்தான் டீம் மவுசு குறையலியே..!

By Veera Kumar

உலகக்கோப்பை தொடரில், அடிமேல் அடி வாங்கினாலும், பாகி்ஸதான் கிரிக்கெட் அணி மற்றும் அதன் வீரரர்கள் குறித்து கூகுளில் தேடுவோர் மிக அதிகம் பேர் இருந்துள்ளனர்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட கிரிக்கெட் அணி, வீரர்கள் குறித்த விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா 2வது இடத்திலும் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற அணிகள் வருகின்றன.

Pakistan Cricket Team tops Google search charts

விளையாட்டு பற்றி மட்டுமின்றி, வீரர்களின் உடல் அம்சம், குணநலன்கள் போன்றவை பற்றியும் அதிகம்பேர் தேடியுள்ளனர். பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் இர்பானின் உயரம் குறித்துதான் அதிகம் பேர் தேடியுள்ளதாக கூகுள் கூறியுள்ளது.

ஜேம்ஸ் டெய்லரின் உயரம், கோலியின் சிகையலங்காரம், ஜெயவர்தனே பேட் உடைந்தது ஆகியவை குறித்தும் அதிகம் தேடப்பட்டுள்ளன. கிறிஸ் கெய்ல் இரட்டை சதம் அடித்ததும், பலரும் அதுகுறித்து கூகுளில் தேடிய நிலையில், தெற்காசியாவை சேர்ந்த பலரும் கெய்லின் நடனம் பற்றி தேடியுள்ளனர். இதுபோன்ற சுவாரசிய தகவல்களை கூகுள் வெளியிட்டுள்ளது.

Story first published: Monday, March 2, 2015, 16:08 [IST]
Other articles published on Mar 2, 2015
English summary
Pakistan have topped the chart of most searched teams playing in the ongoing ICC World Cup despite not performing well, a latest study by global online giant Google said.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X