For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி ஓய்வு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
 

By Kalai Mathi

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார். இன்னும் 2 ஆண்டுகளுக்கு லீக் போட்டிகளில் விளையாடவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

உலகின் ஆபத்தான கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் பாகிஸ்தானின் ஷாகித் அப்ரிடி. 36 வயதான இவர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இவர் 20 ஓவர் போட்டிகளில் மட்டும் இதுவரை விளையாடி வந்தார்.

கேப்டன் பதவியிலிருந்து விலகல்

கேப்டன் பதவியிலிருந்து விலகல்

கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை 20 ஓவர் போட்டிகளில், பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்தார். உலக கோப்பை தொடர் நிறைவுற்றதும் கேப்டன் பதவியிலிருந்து அப்ரிடி விலகினார்.

முடிவுக்கு வந்த கிரிக்கெட் வாழ்க்கை

முடிவுக்கு வந்த கிரிக்கெட் வாழ்க்கை

இந்நிலையில், சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், அவரது 21 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்ததுள்ளது.

முறியடிக்க முடியாமல் இருந்த சாதனை

முறியடிக்க முடியாமல் இருந்த சாதனை

கடந்த 1996-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் 37 பந்துகளில் இவர் அடித்த அதிவேக சதம், உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை 19 ஆண்டுகளுக்கு பிறகு டி வில்லியர்ஸ் 31 பந்துகளில் சதம் அடித்து முறியடித்தார்.

27 டெஸ்ட் போட்டிகள்

27 டெஸ்ட் போட்டிகள்

27 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அப்ரிடி 1176 ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிகளவாக 156 ரன்களை குவித்துள்ளார். 48 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

398 ஒருநாள் போட்டிகள்

398 ஒருநாள் போட்டிகள்

இதேபோல் 398 ஒருநாள் போட்டிகளில் அப்ரிடி விளையாடியுள்ளார். அதில் 8064 ரன்களை குவித்துள்ளார். அதிகளவாக 124 ரன்களை எடுத்துள்ள அப்ரிடி 395 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

சிறந்த ஆல்ரவுண்டர்

சிறந்த ஆல்ரவுண்டர்

மேலும் 98, இருபது ஒவர் போட்டிகளில் ஆடி 1405 ரன்களை எடுத்துள்ள அப்ரிடி 97 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். சிறந்த பேட்ஸ் மேனாக மட்டுமின்றி சிறந்த ஆல் ரவுண்டராகவும் அப்ரிடி இருந்தார் என்பத குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, February 20, 2017, 9:20 [IST]
Other articles published on Feb 20, 2017
English summary
Pakistan allrounder Shahid Afridi on Sunday announced his retirement from international cricket.The 36 years old Afridi had already quit Test and ODI cricket.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X