விஜயகாந்த்துக்கு அப்புறம் இந்த விருச்சிககாந்த்தான்.. கோஹ்லி பற்றி பாகிஸ்தான் கோச் சொல்றத பாருங்க!

Subscribe to Oneindia Tamil

பிரிஸ்பேன்: பாகிஸ்தானின் 22 வயது இளம் வீரர் பாபர் அசாம், இந்தியாவின் விராட் கோஹ்லி போல, பெரிய வீரராக வருவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர், மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடசென்றுள்ளது. முன்னதாக ஒரு வார்ம்-அப் போட்டியில் ஆடுகிறது அந்த அணி.

பெர்த் நகரிலுள்ள ரேடியோ ஸ்டேஷன் ஒன்றுக்கு பாக். பயிற்சியாளர் பேட்டியளித்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

விராட் கோஹ்லி

பாபர் அசாம் இளம் வயதிலேயே மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாகியுள்ளார். விராட் கோஹ்லி வயதில், பாபரும், அவரை போன்ற திறமைசாலியாக இருப்பார் என நினைக்கிறேன். இது கொஞ்சம் அதிகப்படியான புகழ்ச்சிதான். இருந்தாலும், பாபரிடம் அந்த அளவுக்கு திறமையுள்ளது என நினைக்கிறேன்.

ஆஸ்திரேலியா தோல்வி

ஆஸ்திரேலியா இப்போது தென் ஆப்பிரிக்காவிடம் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து பின்தங்கியுள்ளது. நாங்கள் நியூசிலாந்தில் ஆடிய அனுபவத்தை கொண்டு ஆஸ்திரேலியாவை வெல்ல முயற்சி செய்ய இது நல்ல வாய்ப்பு.

நல்ல அனுபவம்

நியூசிலாந்தில் ஆடிவிட்டு ஆஸ்திரேலியா வந்துள்ளதால், மைதான நிலைமையில் பெரிய வித்தியாசம் இருக்காது என்பது பாகிஸ்தானுக்கு பலமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாபர் அசாம், இதுவரை 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே ஆடியுள்ளார். நியூசிலாந்துக்கு எதிராக 90 ரன்கள் எடுத்தது அவரது அதிகபட்ச டெஸ்ட் ரன்.

இவங்களுக்கு இதே வேலை

அதேநேரம், 13 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள பாபர் அசாம் 3 சதங்கள் அடித்துள்ளார். இந்த மூன்றுமே, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சேகரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் ஒன்று. பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும், இந்திய வீரர்களோடு தங்களது பேட்ஸ்மேன்களை ஒப்பிட்டு பார்க்காமல் இருக்க முடியாது. சச்சின் டெண்டுல்கர் புகழ் பெற்ற காலத்தில், தங்கள் அணியில் அப்படி ஒரு வீரரை உருவாக்க முயன்றனர். இதற்காக இம்ரான் நசீர் என்ற ஓப்பனிங் பேட்ஸ்மேனை, தங்கள் அணியின் சச்சின் என புகழ்ந்தனர். ஆனால் அவரை இப்போது பாகிஸ்தான் ரசிகர்களில் பலரே கூட மறந்திருப்பர் என்பதே நிதர்சனம்.

English summary
Pakistan coach Mickey Arthur compared "young gun" Babar Azam to Virat Kohli today (December 1), saying the 22-year-old reminded him of the India skipper at the same age.
Please Wait while comments are loading...