For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தேசிய கீதம் இசைத்தபோது ஹாயாக சூயிங்கம் சாப்பிட்ட இந்திய கிரிக்கெட் வீரர்.. நெட்டிசன்கள் கொந்தளிப்பு

By Veera Kumar

கான்பூர்: தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது வாயில் சுயிங்கம் சுவைத்துக் கொண்டிருந்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்தியா-இங்கிலாந்து நடுவேயான முதலாவது டி20 போட்டி கான்பூரில் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்கும் முன்பாக வழக்கம்போல இரு நாட்டு தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டன.

இந்திய தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, முதல் முறையாக இந்தியாவுக்காக டி20 போட்டிகளில் களமிறங்கிய பர்வேஸ் ரசூல் தனது வாயில் சுயிங்கம் வைத்து சுவைத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து நெட்டிசன்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.,

காஷ்மீர் வீரர்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ரசூல், 2014ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிராக டாக்காவில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளுக்கு பிறகு நேற்றைய போட்டியில்தான் இந்திய சீருடை அணியும் வாய்ப்பை பெற்றிருந்தார். அதற்குள்ளாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

பிக்அப் ஆகவில்லை

பிக்அப் ஆகவில்லை

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து கேப்டன் இயோன் மோர்கன் விக்கெட்டை ரசூல் வீழ்த்தியிருந்தார். முன்னதாக பேட்டிங்கில் 5 ரன்கள் எடுத்தார். ஆனால் 32 ரன்களை வாரி வழங்கிவிட்டார் ரசூல். இப்போட்டியில் 11 பந்துகள் எஞ்சியிருந்தபோது இங்கிலாந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய ஜெர்சி ஓ.கே

டிவிட்டரில் ரசிகர்கள் இதுகுறித்து வெளியிட்ட சில ஆதங்கங்களை பாருங்கள்:

இதுதான் முக்கியமா

தேசிய கீதத்தை விட சூயிங்கம் சுவைப்பதுதான் முக்கியமா என கோபப்படுகிறார் இந்த நெட்டிசன்.

அணியில் நீடிக்க எதிர்ப்பு

தேசிய கீதம் இசைக்கும்போது சூயிங்கம் சுவைப்பது பெரும் அவமானம். ரசூலுக்கு இந்திய அணியில் நீடிக்க தகுதியில்லை என்கிறார் இந்த நெட்டிசன்.

பெருமை

தேசிய கீதம் பாடுவது விளையாட்டில் ஊக்கம் கொடுத்து வெற்றிக்கு வகை செய்யும் என்று ஒரு பெரிய விளக்கத்தையே கொடுத்துள்ளார் இவர்.

Story first published: Friday, January 27, 2017, 14:19 [IST]
Other articles published on Jan 27, 2017
English summary
During the first T20I between India and England at Kanpur, Parvez Rasoo drew criticism from many on social media for allegedly disrespecting the national anthem.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X