For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

துணிகள் டர்ர்ர்ர்.. நைக் மீது இந்திய கிரிக்கெட் அணி உர்ர்ர்!

By Staff

மும்பை: தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, நைக் ஸ்பான்சர் செய்துள்ள துணிகள் உள்ளிட்டவை மிகவும் மோசமாக உள்ளதாக, இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் விளையாடி வருகிறது. மைதானத்தில், இலங்கை அணியை டார் டாராக கிழித்து வரும் வீரர்கள், தங்களுடைய உடைகளும், அதுபோல, எப்போதும் கிழியும் அளவுக்கு, மோசமாக இருப்பதாக புகார் கூறியுள்ளனர்.

கிரிக்கெட் வீரர்கள் அணியும் ஜெர்சி உள்ளிட்ட கிட்' களை, நைக் அணி ஸ்பான்சர் செய்கிறது. உலகின் மிகப் பெரிய பணக்கார கிரிக்கெட் வாரியமான, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துடன், இதற்கான ஒப்பந்தத்தை நைக் செய்துள்ளது.

2006 முதல்

2006 முதல்

2006ம் ஆண்டு முதல், இந்திய கிரிக்கெட் அணிக்கு, கிட் ஸ்பான்சராக நைக் உள்ளது. வரும், 2020ம் ஆண்டு வரையிலான ஒப்பந்தம், கடந்த ஆண்டு செய்யப்பட்டது. அப்போது, கிரிக்கெட் வாரியத்துக்கு, நைக், ரூ.370 கோடி ரூபாய் தந்துள்ளது.

பணம் ஏராளம்

பணம் ஏராளம்

மேலும், 2020ம் ஆண்டு வரை, ஒவ்வொரு போட்டிக்கும், ரூ,87,34,000ஐ, நைக் தரும். ஆனால், நைக் வழங்கும் கிட்கள் மோசமானதாக, தரமில்லாமல் உள்ளதாக, வீரர்கள் புகார் கூறியுள்ளனர்.

கேவலமா இருக்கு பாஸ்

கேவலமா இருக்கு பாஸ்

பி.சி.சி.ஐ.,யை நிர்வகித்து வரும், சுப்ரீம் கோர்ட் நியமித்துள்ள நிர்வாகக் குழுவுக்கு இது தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் வாரத்தில், நைக் நிறுவனத்துடன் பேச உள்ளதாக நிர்வாகக் குழு தலைவர் வினோத் ராய் கூறியுள்ளார்.

பணக்கார விளையாட்டுக்கு இது தேவையா

பணக்கார விளையாட்டுக்கு இது தேவையா

இந்தியாவின் பணக்கார விளையாட்டு கிரிக்கெட். பெரும் பணக்காரர்கள் ஆடும் போட்டி இது. இப்படியாப்பட்ட வீரர்களுக்கு ஏன் நைக் இப்படி ஒரு குடைச்சலைக் கொடுக்கிறதோ.

இந்திய வீரர்களின் மானத்தை காப்பாற்றுமா நைக்!

Story first published: Wednesday, August 23, 2017, 16:49 [IST]
Other articles published on Aug 23, 2017
English summary
Indian Cricket Players, BCCI unhappy with kit sponsor Nike
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X