For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பெய்லி ஓகே... ஆனால் 'கேப்டன்' ஸ்மித்தான் பெஸ்ட்... ரிக்கி 'கமென்டிங்'!

By Mathi

மெல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் அடுத்த கேப்டனாக ஸ்டீவன் ஸ்மித்தை நியமிக்க வேண்டும் என அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

நேற்று நடந்த உலகக்கோப்பையின் இறுதி ஆட்டத்துடன் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார் அந்த அணியின் கேப்டன் மைகேல் கிளார்க். இதனால் அடுத்த கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. கிளார்க் காயத்தால் விளையாட முடியாத போட்டிகளில் ஜார்ஜ் பெய்லி கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால் கிளார்க் விளையாடி உலகக்கோப்பை போட்டிகளில் சாதராண வீரராக கூட பெய்லிக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.

Ponting endorses Smith as next ODI captain

இதுபற்றி பாண்டிங் கூறியது: ஜார்ஜ் பெய்லியின் கேப்டன்ஷிப் எனக்கு மிகவும் பிடிக்கும், அதேநேரம்த்தை கேப்டனாக அறிவிக்க இதுவே சரியான தருணம். மூன்றாவதாக களமிறங்கி அற்புதமாக ஆடி வருகிறார். டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக ஆடிவருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் கிளார்க் டெஸ்ட் போட்டிகளிருந்தும் ஓய்வு பெற்றுவிடுவார். ஆஸ்திரேலியாவின் அடுத்த கேப்டனாக ஸ்மித்தை நியமிப்பதே சரியான முடிவாக இருக்கும்.

ஸ்மித் தற்போது முழு பாஃர்மில் உள்ளார். எனவே, அவருக்கு கேப்டன் பதவி தருவதே பொருத்தமானதாக இருக்கும். இவ்வாறு ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.

Story first published: Monday, March 30, 2015, 14:53 [IST]
Other articles published on Mar 30, 2015
English summary
Former Australia captain Ricky Ponting believes there is "no doubt at all" that Steven Smith should take over from Michael Clarke as the team's next ODI leader.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X