For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பச்சை சட்டைக்காரர்களை பஞ்சர் செய்வார்களா ப்ளூ பாய்ஸ்? இந்தியா -வங்கதேசம் இன்று பலப் பரிட்சை!

By Veera Kumar

மெல்போர்ன்: உலக கோப்பை காலிறுதியில் இந்தியா இன்று வங்கதேசத்தை சந்திக்க உள்ளது. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு இப்போட்டி தொடங்க உள்ளது.

நடப்பு உலக கோப்பையில், இந்தியா தான் விளையாடிய 6 லீக் ஆட்டங்களிலும் வெற்றியை பெற்று அசைக்க முடியாத அணியாக உருவெடுத்துள்ளது. நடப்பு சாம்பியன் நாங்கள்தான் என்பதை ஆணி அடித்தாற்போல பிற நாடுகளுக்கு புரிய வைத்துள்ளது இந்தியா.

கவனம் தேவை

கவனம் தேவை

தற்போது காலிறுதி போட்டிகள் ஆரம்பித்துள்ளன. காலிறுதி தொடங்கி, பைனல் வரை இனிமேல் எல்லாம் நாக்-அவுட் சுற்றுகள்தான் என்பதால், ஒரு அணி செய்யும் சிறு தவறும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, எந்த அணியையும் குறைத்து மதிப்பிடாமல், முழு கவனத்தையும் போட்டியில் வைக்க வேண்டியது இந்திய அணிக்கு அவசியமாகும்.

தவான் டாப்

தவான் டாப்

தொடக்க வீரர் ஷிகர் தவான் 337 ரன்களுடன் இந்திய பேட்டிங் வரிசையில் அதிக ரன் குவித்த வீரராக காலரை தூக்கிவிட்டு நடமாடிவருகிறார். இவருக்கு அடுத்தபடியாக விராட் கோஹ்லி 301 ரன்களுடன் உள்ளார்.

இவங்களும் முக்கியம்

இவங்களும் முக்கியம்

ரஹானே மற்றும் ரோகித் ஷர்மா ஒருநாள் சிறப்பாக ஆடுவதும் மற்றொரு போட்டியில் குறைந்த ரன்களில் அவுட் ஆவதுமாக இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் இருவரும் சிறப்பாக ஆடும் தினத்தில், எந்த அணியாலும் கட்டுப்படுத்த முடியாது.

டாப் பவுலர் நம்மாளுதான்

டாப் பவுலர் நம்மாளுதான்

இந்திய பவுலர்களை பொறுத்தளவில், எதிர்பார்ப்புக்கும் மீறி சிறப்பான பங்களிப்பை அளித்து வருகின்றனர். முகமது ஷமி 15 விக்கெட்டுகளுடன், நடப்பு உலக கோப்பையின் முன்னணி பந்து வீச்சாளர்களில் ஒருவர் என்ற சாதனையை தக்க வைத்துள்ளார். நியூசிலாந்தின் சிறு மைதானங்களில் நடந்த போட்டிகளில் இந்திய பவுலர்கள் சற்று ரன்களை அதிகம் விட்டுக்கொடுத்த போதிலும், 6 போட்டிகளிலும் எதிரணிகளை ஆல்-அவுட்டாக்கி அசத்தினர். தற்போது மீண்டும் ஆஸ்திரேலிய பிட்சில் விளையாட உள்ளது இந்திய பவுலர்களுக்கு அல்வாவை தூக்கி வாயில் வைத்தது போன்ற மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

தல போல வருமா..

தல போல வருமா..

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டிகளின்போது, இக்கட்டான நேரத்தில் தனது கேப்டன் ஆட்டத்தை வெளிப்படுத்தி தனது பராக்கிரமம் இன்னும் அப்படியேத்தான் உள்ளது என்பதை, பறைசாற்றிவிட்டார் டோணி. எனவே அவரது ஊக்கத்தால் பிற வீரர்களும் இன்று பச்சை சட்டையை துவம்சம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

வங்கதேசம் எப்படி?

வங்கதேசம் எப்படி?

வங்கதேச அணியை பொறுத்தளவில் மஹமதுல்லா மட்டும் 344 ரன்கள் குவித்து மிரட்டி வருகிறார். மற்றபடி டோணி பாய்சுக்கு போட்டி அளிக்கும் அளவுக்கு ஈடான பேட்ஸ்மேன்கள் அங்கு கிடையாது. இந்திய அணி பேட்ஸ்மேன்களில் தூக்கத்தை கெடுக்கும் பவுலர்களும் அங்கு இல்லை. ருபேல் போன்ற ஒரு சில பவுலர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி கொடுக்க கூடும். ஆனால், அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று நம்புகின்றனர் கிரிக்கெட் பார்வையார்கள்.

Story first published: Thursday, March 19, 2015, 7:57 [IST]
Other articles published on Mar 19, 2015
English summary
Having decimated six oppositions without much trouble, India's real title defence starts with a tricky quarter-final clash against a confident Bangladesh in the ICC Cricket World Cup, here tomorrow.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X