For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சபாஷ் வீராங்கனைகளே.. உலக கோப்பை பைனலில் இங்கிலாந்துக்கு மரண பயம் காட்டிய இந்தியா!

By Veera Kumar

சென்னை: சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்தியும் கூட இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்திடம் வெறும் 9 ரன்களில் தோல்வியடைந்தது.

மினி உலக கோப்பை என அழைக்கப்படும் ஆண்களுக்கான, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் இந்திய அணி சரணடைந்த பைனல் போட்டியை ஒப்பிட்டால், இந்திய மகளிர் அணி எவ்வளவோ மேல் என்று புகழ்கிறார்கள் ரசிகர்கள்.

2005ம் ஆண்டு உலக கோப்பையின்போது பைனலுக்குள் சென்ற இந்திய அணி அப்போது ஆஸி.யிடம் தோல்வியடைந்தது. அதன்பிறகு நேற்று நடைபெற்ற உலக கோப்பை பைனல் போட்டியில் இங்கிலாந்திடம் இந்தியா தோற்றது.

ஆசியாவின் பெஸ்ட்

ஆசியாவின் பெஸ்ட்

இருப்பினும் மகளிர் கிரிக்கெட உலக கோப்பையில் ஆசிய அணிகள் தொடாத உயரத்தையெல்லாம் தொட்டுள்ளது இந்திய கிரிக்கெட் அணி மட்டும்தான். ஆஸி.யும், இங்கிலாந்தும்தான் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டில், அவர்கள் கண்களில் விரலை விட்டு ஆட்டியது இந்திய அணிதான்.

ஏற்கனவே உதைபட்ட இங்கிலாந்து

ஏற்கனவே உதைபட்ட இங்கிலாந்து

இங்கிலாந்து அணியை லீக் ஆட்டத்தில் 35 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது, மித்தாலி ராஜ் தலைமையிலான இதே இந்திய அணிதான். அதேபோல அரையிறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தியது இந்தியா. ஆக, இரு பெரும் அணிகளையும் மண்ணை கவ்வ செய்துவிட்டுதான் பைனலுக்குள் வீர நடை போட்டு சென்றது இந்தியா. அந்த வகையில் பைனலில் அடைந்த 9 ரன்கள் தோல்வி என்பது ஒரு பொருட்டே கிடையாது.

மழையால் பாதிப்பு

மழையால் பாதிப்பு

இங்கிலாந்து எடுத்த 228 ரன்கள் குறைந்த ஸ்கோர் போல தெரிந்தாலும் கூட, மழை பெய்து காரியத்தை கெடுத்துவிட்டது. ஈரப்பதம்மிக்க பிட்ச் மற்றும் மைதானத்தில் இந்த இலக்கே இமாலய இலக்காக மாறிப்போனது. அப்படியும் அருகாமையில் வந்துதான் வெற்றி வாய்ப்பை இழந்தது இந்திய அணி.

மித்தாலிராஜ் அபாரம்

மித்தாலிராஜ் அபாரம்

இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் 2005 உலக கோப்பையின்போதும், இந்த உலக கோப்பையின்போதும் அணியோடு இருந்த அனுபவக்காரர். இவருக்கு இவ்வருட உலக கோப்பை கடைசி உலக கோப்பை என்பதால் வெற்றியோடு விடைபெறச் செய்ய சக வீராங்கனைகள் கடுமையாக முயன்றனர் ஆனாலும், கிரிக்கெட்டில் எதுவும் நடக்கலாம் என்ற வார்த்தைதான் நேற்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆண்களைவிட பெட்டர்தான்

ஆண்களைவிட பெட்டர்தான்

ஆண்கள் பிரிவு கிரிக்கெட்டில், சமீபத்தில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி பைனலில் பாகிஸ்தானுக்கு ரன்னை வாரி வழங்கிய இந்தியா 180 ரன்கள் வித்தியாசத்தில் பெரும் தோல்வியை சந்தித்தது. அதை ஒப்பிட்டால், இந்திய மகளிர் அணியின் தோல்வி என்பது தோல்வியே அல்ல. கடைசி வரை போராடி நாட்டுக்கு பெருமை தேடி தந்த இந்த மகளிர் அணிக்கு பிசிசிஐ சிறப்பு கவனம் கொடுக்க வேண்டியது மிகவும் அவசியம்.

Story first published: Monday, July 24, 2017, 12:09 [IST]
Other articles published on Jul 24, 2017
English summary
India women cricket team's dream of lifting their maiden ICC World Cup trophy came a cropper as they were outclassed by England in a nail biting final at the Lord's on Sunday (July 23).
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X